பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

சுலட்சணா காதலிக்கிறாள்.

.

இந்த விஷயத்தில் அவள் சொல்வதை நான் கேட்கத்தயாராயிருக்கிறேன். உங்கள் மகனை அவளுக்குப் பிடித்து அவள் சரி என்றால் தாராளமாகத் திருமணம் செய்து கொள்ளலாம். உங்கள் மகனும் அவளைக் காதலித்து அவளும் உங்கள் மகனைக் காதலித்தால் எனக்கு ஆட்சேபனையே யில்லை. இது அவள் வாழ்க்கை. அவள் தீர்மானப்படி நடக்கும். என் விருப்பம்னு எதையும் அவள் மேல் நான் திணிக்கமாட்டேன். நீங்கள் உதயா பல்கலைக்கழகத்திற்குப் போய்ச் சுலட்சணாவையே பார்த்துப் பேசுங்களேன்'

திட்டவட்டமான இந்தப் பதிலைக் கேட்டு வேறு வழியின்றி அவரிடம் சொல்லி விடைபெற்றுக்கொண்டு. உதயா பல்கலைக்கழகத்துக்குப் புறப்பட்டார் தர்மராஜ்.

தனக்கு வேண்டியவரும், உறவினருமான டீன் வீட்டில் இருந்து கொண்டு டீன் மூலமே சுலட்சணாவைக் கூப்பிட்டனுப்பினார் அவர். டீனிடம் தர்மராஜன் ஆதங்கப்பட்டார்:

'இந்த விஷயம் இவ்வளவு பெரிசாக ஆகும்னே நான் நினைக்கலே, இந்தப் பொண்னைச் சம்மதிக்க வைக்கலேன்னா என் ஸ்ன்'னோட ஃப்யூச்சரே போயிடும் போலிருக்கு'

கொஞ்சம் ஹார்டு நட். இவ வழிக்கு வர மாட்டாள்னு நினைக்கிறேன். உன் பணத்துக்கும் குணத்துக்கும் அழகுக்கும் ஆயிரம் பொண்கள் போட்டி போட்டுக்கிட்டு வருவாங்கடா. இவளை மறந்து தொலை'ன்னு நானே கனகராஜுக்கு இங்கே அட்வைஸ் பண்ணினேன். அவன் கேட்கலே’-

இதில் அவன் ஏறக்குறைய மெண்டல் ஆயிட்டான்னே சொல்லலாம்.

வீராசாமியோடு சுலட்சணா டீன் வீட்டுக்கு வந்தாள். அவர்கள் இருவரும் இப்படித் தன்னைக் கூப்பிட்டனுப்பியது அவளுக்கு அறவே பிடிக்கவில்லை என்று அவள்