பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

சுலட்சணா காதலிக்கிறாள்



என்னை மன்னிக்கனும்.நான் உங்க ஸன்னைக் காதலிக்கலே. காதலிக்கிறது-உடம்பின் அழகு, பண வசதி, இதை எல்லாம் பொறுத்தது என்று நான் நம்பவும் இல்லை. நான் எதிர்பார்க்கிற சில குணங்கள் யாரிட்ட இருக்கோ அவங்களிலே ஒருத்தரைத்தான் என் மனசு விரும்பும். அந்தக் குணங்கள் இவரிட்ட இருக்கு. இவரை நான் காதலிக்கிறேன்' என்றாள்.

இதிலே மறுபரிசீலனை எதாவது உண்டாமா

இல்லை. நிச்சயமாக இல்லை. இப்படி விஷயங்கள் மறுபரி சீலனைக்கு உரியவை அல்ல'-என்று தீர்மானமான பதிலைச் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள் அவள், ஒரு கை-அதாவது வலதுகை நுனிக்குப் பதில் சட்டைத் துணிமட்டுமே தொங்கும் முகமலர்ச்சியற்ற அந்தக் கறுப்பு இளைஞனைப் பொறாமையும் அசூயையும் பொங்கும் பார்வையால் பார்த்தார் தர்மராஜ், நினைத்ததை அடையும் வாய்ப்பைத் தாம் இழந்தாயிற்று என்ற நஷ்டம் அவருள் உறைத்துப் புரியத் தொடங்கியது. வெறும் முக அழகை-பணத்தை-பதவிக்கா-அவற்றால் வரும் பவிஷுகள்-செல்வாக்குகள் இவற்றைத் தவிர வேறு எதையுமே பெரிதாக மதித்திராத அந்தப் பரம்பரைப் பணக்காரர் தம் வாழ்வில் முதல் முதலாகக் கொள்கைகளும் வீரமுமே அவற்றை எல்லாம். விடப் பெரியவை-மதிக்கத் தக்கவை' என்று பிடிவாதமாகக் கூறிக் கொள்கைகளையும் சமூகத் துணிச்சலையுமே காதலிக்கும் அதிரூபவதியான இளம் பெண் ஒருத்தியைக் கண்ணெதிரே கண்டு அயர்ந்து போனார். இப்போது சுலட்சணா அவர் பார்வையில் இரட்டை மடங்கு அழகியாய்த் தோன்றினாள். அவள் உடம்பை விட உள்ளம் அதிக அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது மறுபடியும் அவருக்கு உறுதியாகத் தெரிந்தது.

- முற்றும் -