பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

முள்வேலிகள்



மனைவி எவ்வளவோ மன்றாடியும் அவன் கேட்கவில்லை. கோபமும் பிடிவாதமும் அவனுக்கு வெறியூட்டியிருந்தன.

என்னை மன்னிச்சிடுங்க. நான் பண்ணினது தப்புத் தான், அவங்க பிரியமாக் கூப்பிட்டுக் குடுக்கறப்ப "வேண்டாம்-வாங்கிக்க மாட்டேன்’னு எடுத்தெறிஞ்சு பேசித் திருப்பிக் குடுக்க முடியலே. இனிமே எதையும் வாங்க மாட்டேன். இப்ப நீங்க உட்கார்ந்து சாப்பிட்டு முடியுங்க..."

"முடியாது! முடியாது! கண்ட கண்ட எடுபட்ட பொம்பிளைங்க கையிலிருந்தெல்லாம் ஊறுகாயும், மத்ததும் பிச்சை வாங்கித் தின்ற நிலைமைக்கு இந்த வீட்டைக் கொண்டாந்தாச்சு, இனிமே இங்கே சாப்பிடறதே பாவம்..."

ஒரு வெறியோடு சமையலறை முழுவதும் தேடி ஒரு பழைய ஹார்லிக்ஸ் பாட்டிலில் மூடிவைக்கப்பட்டிருந்த அந்தப் பச்சை மிளகு ஊறுகாய் முழுவதையும் ஏதோ மிகவும் அருவருப்பான செத்த எலியைத் தூக்குகிற மாதிரித் தூக்கிப் போய்க் குப்பையில் எறிந்துவிட்டு வந்தான் கண்ணன். அதைச் செய்துவிட்டு வந்தபின்பும் கூட நெடு நேரத்துக்கு அவனது ஆத்திரம் தணியவில்லை. மனைவி அவனைக் கடிந்து கொண்டாள்.

“உங்களுக்கு வேண்டாம்னு நீங்க சாப்பிடத் தேவையில்லை அநாவசியமாப் பெறுமானமுள்ள பண்டத்தைக் குப்பையிலே கொண்டுபோய்க் கொட்டிட்டீங்களே; இது உங்களுக்கே நல்லா இருந்தாச் சரிதான்."

"ஒழுக்கங் கெட்டவங்க வீட்டுப் பண்டத்தை விவஸ்தை உள்ள யாரும் கையாலே தொடமாட்டாங்க."

நமக்குக் கறிகாய் விற்கிற கூடைக்காரி, அரிசி விற்கிற - கடைக்காரர், பலசரக்குத் தருகிற வியாபாரி எல்லாரும்