பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

27


ஒழுக்கமுள்ளவங்களான்னு பரீட்சை பண்ணிப் பார்த்தப் புறம்தான் நாம வாங்கிச் சாப்பிடறமா?"

வளுடைய இந்த வாதத்துக்கு அவனிடம் சரியான பதில் இல்லாவிட்டாலும் ஒரேயடியாகக் கோபத்தின் சுருதியை மேலேற்றி உரத்த குரலில், நீ இப்போ வாயை மூடப் போறியா இல்லியா?’’-என்று கூப்பாடு போடவே அவள் அடங்கிவிட்டாள். அவனுக்குப் பயந்து மேலும் அவள் விவாதிக்கவில்லை.

ஆனாலும் தன் மனத்திலிருந்த அதே வெறுப்பையும் துவேஷத்தையும் வீட்டிலிருந்த மற்றவர்களின் மனத்தில் விதைக்க முடியாததைக் கண்ணனே உணர்ந்தான். தெரிந்தும் தெரியாமலும் தன் வீட்டிலுள்ளவர்கள் அம்மிணி அம்மாவின் வீட்டோடு பழகிக் கொண்டிருப்பதை அவன் அநுமானித்துக் கொள்ள முடிந்தது, அதற்கு வசதியாக இரண்டு வீட்டுக்கும் நடுவே சுவரோ வேலியோ எதுவும் இல்லை. இந்த வீடும், அந்த வீடும் சந்திக்கிற எல்லையின் பின் பக்கத்திலிருந்து முன்பக்கம் வரை உள்ள நூற்றுக்கு மேற்பட்ட அடி தூரத்தில் எந்த இடத்திலும் யாரும் யாரோடும் நின்று பேசலாம், பார்க்கலாம், சைகைகள் காட்டலாம் என்கிற மாதிரி இருந்தது. வீட்டின் நான்கு பக்கத்திலும் இப்படித் திறந்து கிடந்த எல்லையாகத்தான் இருந்தது.

இந்தப் பக்கத்து வீட்டுக்குக் குடி வந்திருந்த நாகசாமி பாகவதரையும் கண்ணனுக்குப் பிடிக்காமல் போயிற்று. காரணம், அவர் பணத்துக்கு ஆசைப்பட்டு அம்மிணி அம்மாளின் வீட்டோடு நெருங்கிப் பழகி நாராயணீயம்,தேவி பாகவதம் என்று சொல்லிக்கொண்டிருந்ததுதான். அவன் எச்சரித்ததையும் அவர் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

கண்ணனுக்கு இருந்த அத்தனை விரோதமும், வெறுப்பும் அக்கம்பக்கத்து வீட்டாரிடம் அவன் வீட்டிலுள்ள மற்றவர்