பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

29


இல்லை ஒரு வீம்புக்காகத்தான் கண்ணன் கஷ்டப்பட்டு அதிக வட்டிக்குக் கடன் வாங்கிக் காம்பவுண்டுச் சுவரை எடுக்கும் முயற்சியில் அப்போது தீவிரமாக இறங்கியிருந்தான். யார் தடுத்தும் கேட்கக் கூடிய மனநிலையில் அவன் அப்போது இல்லை. கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் இருந்தான்.

சுவர் எடுக்குமுன் மாநகராட்சியில் வரைபடம் கொடுத்து அநுமதி வாங்க அலைய வேண்டியிருந்தது. சிமெண்ட் தட்டுப்பாடு இருந்ததனால் நல்ல சிமெண்ட் கிடைக்கவில்லை. இலட்சக்கணக்கில் காண்ட்ராக்ட் எடுத்த பெரிய கட்டிட வேலைகளுக்கு அலைந்து கொண்டிருந்ததனால் வெறும் காம்பவுண்டுச் சுவர் எடுப்பது போன்ற சிறிய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாயிருந்தது. இருந்தாலும் கண்ணன் முரண்டு பிடித்து இறங்கினால் இறங்கினதுதான். கிடைத்த சிமெண்டை வைத்து அவசரத்துக்கு வாங்கின அரை வேக்காட்டுச் செங்கல்லைக் கொண்டு தவித்த மாடு பிடிப்பதுபோல் பிடித்த ஆட்களால் இரண்டே நாட்களில் காம்பவுண்டுச் சுவர் எடுத்து முடிக்கப்பட்டது. மேலே ஒர் அடி உயரம் பார்ப்பட் வயரும் போடப்பட்டது. .

"நாலு மாசமா உடுத்திக்கொள்ள இரண்டாவது புடவை இல்லாமல் கஷ்டப்படறேன். அதுக்கு ஒரு வழி பண்ணாத நீங்க அதிக வட்டிக்குக் கடன் வாங்கி வீம்புக்காக இந்தச் சுவரை எடுத்து முள்வேலியும் போட்டாச்சு...! அழுத்தி ஒரு உதை உதைச்சால் கீழே விழுந்துடும் இந்தச் சுவர்..."-என்று கண்ணனின் மனைவி கூறியதை அவன் காதில் வாங்கிக் கொண்டதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆயிற்று. -

உண்மையில் அப்போதிருந்த பொருளாதார நிலையில் கண்ணன் அந்தச் சுவர்களை எடுத்தது அநாவசியமான