பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

முள்வேலிகள்

புதிதாக இழைய ஆரம்பித்ததைக் கண்ணன் ரசிக்கவில்லை. தனது ஏழ்மையையும் அம்மிணி அம்மாளுடைய வசதியையும் சீர்தூக்கிப் பார்த்து அந்த முடிவைப் பாகவதர் செய்ததாக் அவன் தனக்குத் தானே கற்பித்துக் கொண்டுவிட்டான். தாழ்வு மனப்பான்மைக்கும் இப்படி எதிர்மறையாகக் கற்பனை செய்துகொள்வதற்கும் நிறைய நெருக்கம் உண்டு. தன்னைத் தானே குறைவாய்க் கற்பித்துக்கொண்டு தாழ்வு உணர்வோடு இருக்கிற ஒருவனுக்குச் சுற்றி நடக்கிற சகலமும் தனக்கு எதிராகத்தான் நடக்கின்றனவோ என்ற எண்ணமே மிகுந்திருக்கும். இந்த எண்ணமே ஒருவகை நோய் மாதிரி. காரணமற்ற பொருமையும் இதன் துணை உற்பத்தியாக வந்து சேர்ந்து கொள்ளும்.

ஒருவேன் பாகவதர் அம்மிணி அம்மாளைப் பற்றித் தெரியாமல் அந்த அம்மாள் குடும்பத்தோடு பழகாமல் கண்ணனோடும், கண்ணன் வீட்டோடும் மட்டுமே பழகிக் கொண்டிருக்க நேர்ந்திருந்தால் கண்ணனுக்குள் இந்தத் தாழ்வு மனப்பான்மையும் அதனடியாகக் கிளைத்துவிட்ட பொறாமையும் விரோதமும் ஏற்படாமலே போயிருக்கலாம். பாகவதரைப் பற்றிய நல்லெண்ணமே நீடித்திருக்கலாம்.

மனிதன் தன்னுடைய அபாரமான கற்பனை உணர்வினால் இல்லாத விரோதங்களையும் குரோதங்களையும் தனக்குள் தானே கற்பித்து அழிக்க முடியாதபடி வளர்த்துக் கொண்டு விடுகிறான். ஒரு நிலமைக்குப் பின்னால் அவனே விரும்பினால் கூட அவற்றை அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாதபடி அவனைவிட அவை விசுவரூபமெடுத்துக் கொண்டு நின்றுவிடுகின்றன. நிலைமை கட்டுமீறிப் போய் விடுகிறது. கண்ணன் நிலையும் இப்போது அப்படித்தான் ஆயிற்று.

பாகவதர் அம்மிணி அம்மாள் குடும்பத்தோடு நட்பாகப் பழகினாரே ஒழியக் கண்ணன் குடும்பத்தாரோடு விரோத