பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

முள் வேலிகள்

‘’இராமாயணம் கேட்கப் போன நண்பனின் மனம் அங்கே இராமாயணத்தில் லயிக்கவே இல்லை. தாசி வீட்டுக்குப் போனவன் எப்படி எப்படி எல்லாம் சுகத்தை அநுபவித்துக் கொண்டிருப்பான் என்ற கற்பனையிலேயே முழுக்க முழுக்க ஈடுபட்டிருந்தது.

‘’ஐயோ! இந்தப் பிறவியில் எந்தச் சுகத்தையும் அநுபவிக்காமல் பாவம் என்று ஒதுக்கிவிட்டு அடுத்த பிறவிக்குப் புண்ணியம் சேர்த்து ஆகப் போவதென்ன என்று நண்பன் கேட்டதில் என்ன தவறு? போகிற வழிக்குப் புண்ணியம் என்ற ஒரே குருட்டு நம்பிக்கையில் இந்த உலகில் இன்று இந்த விநாடியிலேயே அநுபவிக்கவேண்டிய அநுபவிக்க முடிந்த--சுகங்களை உதறிவிட்டு அடுத்த பிறவிக்கு எதைச் சேர்த்து என்ன கிழிக்கப் போகிறோம்?'

‘’இப்படி இரண்டு பேருமே தாங்கள் போன மார்க்கங்களில் மனம் லயிக்காமல் அவநம்பிக்கைப் பட்டதன் மூலம் அவர்களது பாவ புண்ணியப் பலன்களே இருவருக்கும் முறை மாறிக் கிடைத்தன. தாசி வீட்டுக்குப் போனவன் இராமாயணத்தையே நினைத்துக் கொண்டிருந்ததால் அவனுக்குப் புண்ணியமும் இராமாயணம் கேட்கப் போனவன் தாசி வீட்டையே நினைத்துக் கொண்டிருந்ததால் அவனுக்குப் பாவமும் கிடைத்தன என்றார் இராம கிருஷ்ண பரமஹம்சர்.

‘’இந்தக் கதை இப்போது நமக்கு முழுவதும் பொருந்த வில்லை என்றாலும் நம்மை எதிர்க்கும் சில பொறாமைக்காரர்களுக்கு ஓரளவு பொருந்துகிறது. நாம் என்ன செய்கிறோம் என்பதை வீணாக நினைத்து நினைத்தே தவறாகக் கற்பனை செய்து கொண்டு சிரமப்படுகிறார்கள் சில பொறாமைக்காரர்கள். அவர்களுக்காக நாம் அநுதாபப்படுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது.‘’

இந்த இடத்தில் கதையையும் தாம் சொல்லி வந்ததையும் மற்றவர்கள் முகங்களையும் ஏறிட்டுப் பார்த்தார்