பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

இத் தொகுதியில் என்னுடைய இரண்டு நாவல்கள் (குறு நாவல்கள் என்ற பெயர்தான் உங்களுக்குப் பிடிக்குமானால் எனக்கும் ஆட்சேபணையில்லை) உள்ளன. ‘விரோத வெள்ளம் வடிந்தபின்’ ஒரு பகைமை முற்றிய மனம் நல்ல படி மாறுவதைச் சித்திரிக்கும் 'முள் வேலிகள்' என்ற நாவலும், அழகுள்ள ஆண்மகனைவிடச் சமூக உணர்வுள்ள ஓர் ஆண்பிள்ளையைத்தான் பெண் நேசிக்க முடியும் என்று கூறு கிற சுலட்சணாவை அறிமுகப்படுத்தும்-'சுலட்சணா காதலிக் கிறாள்' என்ற நாவலும் சேர்ந்தது இப்புத்தகம். அதாவது இரண்டு முழு நாவல்கள் அடங்கிய ஒரே புத்தகம்.

இவ்விரண்டு நாவல்களும் சில சில பக்கங்கள் வீதம் பல வாரங்கள் தொடராக வெளிவந்து பின்பு ஒன்றாக நூலாக்கியவை அல்ல. முழுமையாக எழுதப்பட்டு வெளி வந்து முழுமையாகவே இன்று புத்தக வடிவிலும் வருபவை.

அக்கம் பக்கத்திலுள்ள பிறர் தனக்கு விரோதிகளோ என்கிற வீண்கற்பனையில் ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றித் தானே அநாவசியமாக ஒரு முள்வேலி போட்டுக் கொள்கிறான், அந்த வேலி தகரும்போதுதான் உண்மை அவனுக்குப் புரிகிறது. விரோதம் என்கிற வெள்ளம் வடிந்தபின்பே கண்ணனுக்கும் உண்மை புரிகிறது. சுற்றி இருந்த முள்வேலிகள் தகர்கின்றன. மனிதனோடு மனிதனைப் பற்றிய முக்கால்வாசி விரோதங்கள் கற்பிதமானவை. அவை தவிர்க்க வேண்டியவை. தவிர்க்க முடிந்தவை-தவிர்க்கக் கூடியவை என்பது முதல் நாவலில் விவரிக்கப்படுகிறது.

இரண்டாவது நாவல் 'சுலட்சணா காதலிக்கிறாள்' என்பது.பணமும் படிப்பும் முகவசீகரமுமுள்ள ஒரு பயந்தாங் கொள்ளியைவிட வறுமையும், அழகின்மையும் உள்ள ஒரு தைரியசாலியைத் தன் பிரியத்துக்குரியவனாகத் தேர்ந் தெடுக்கும் புதுமைப் பெண்ணாகிய சுலட்சணாவின் கதை இது. வசதியும், அறிவும் வசீகரமும், உள்ள ஒரு பரம்பரைப் பணக்கார இளைஞனைவிடப் பொதுவாழ்வில் 'சிவிக் கரேஜ்' என்கிற சமூகத் துணிச்சலோடு 'ரிஸ்க்' எடுத்துக் கொள்ளத்-