பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

65

---புலவர் மகிழ்மாறன் தன்னிடம் 10ஐ 101ஆகத் திருத்திக் கொள்வதாகச் சொல்லிவிட்டு 1001 ஆகவோ, 1011 ஆகவோ திருத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று கண்ணால் இதைச் சுலபமாகவே அநுமானித்துக் கொள்ள முடிந்தது. அதே நோட்டுப் புத்தகத்தில் புலவர் அந்தத் தலைமை ஆசிரியையிடமும் வசூலுக்குப் போயிருக்க வேண்டும் என்று தோன்றியது. இந்த நாணயக் குறைவும் திரிசமனும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அந்த நோட்டைப் பார்த்தவர்கள் எல்லாரும் தான் தமிழர் படையின் தார் பூசும் முயற்சிக்கு ஆயிரத்தொரு ரூபாய் கொடுத்ததாக நம்பியிருக்கக் கூடுமென்று எண்ணியபோது கதி கலங்கியது. மாதம் தொள்ளாயிரத்து அறுபது ரூபாய்க்கும் குறைவாகச் சம்பளம் வாங்கும் தன்னைப் போன்ற ஒரு என். ஜி. ஒ. ஆயிரத்தொரு ரூபாய் நன்கொடை கொடுப்பது என்பது மற்றவர்களுக்கு மலைக்க வைக்கும் செய்திதானே? .

தான் உண்மையில் கொடுத்தது வெறும் பத்து ரூபாய் தான் என்றும்--மற்றவர்களை வலை போட்டு இழுத்து நன் கொடை வாங்கப் புலவர் தந்திரமாக அதை ஆயிரத்து ஒன்றாகவோ ஆயிரத்துப் பதினென்றாகவோ திருத்திக் கொண்டிருக்கக் கூடும் என்றும் தன் மனைவிக்கு விளக்கி அவளை நம்ப வைப்பதற்குள் கண்ணனுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.

பேரவைக் கூட்டத்துக்கு அங்கத்தினர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பிவிட்டு அஜெண்டா தயாரிப்பதற்காகத் தலைவரைக் கலந்தாலோசிப்பதற்காக அவர் வீட்டுக்குப் போனான் கண்ணன். எப்போதும் இப்படிக் கூட்டத்திற்கு முன் தலைவர் வீட்டுக்குப் போவது வழக்கம்தான். காலனி நலன் நாடுவோர் சங்கத் தலைவர் அவனிடம் வழக்கம் போல் சுமூகமாகப் பேசிப் பழகவில்லை. கொஞ்சம் கோபத்தோடு இருப்பது போல் தோன்றியது. கத்திரித்தாற் போல வார்த்தைகள் வந்தன. தனக்கு முன்பே அவரை அதிருப்தி