பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

முள்வேலிகள்

யாளர்கள் சந்தித்துத் தன்னைப்பற்றி ஒரு வண்டி புகார்களைச் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது கண்ணனுக்கு.

"பாகவதர், அம்மிணி அம்மா போன்றவர்களால் காலனி வளர்ச்சிக்குப் பலவகையிலும் உதவி செய்ய முடியறப்போ அவங்களை நீங்க அநாவசியமா விரோதிச்சுக்சுக்கிறீங்க! அந்தப் புலவருக்கு வெளிப்படையா ஆயிரக்கணக்கில் டொனேஷன் குடுத்து எல்லார் வீட்டுச் சுவரிலேயும் தாரைப் பூசி அசிங்கம் பண்ண வச்சிருக்கீங்க! ஓவர் ஹெட் லயன் பிரச்னையிலே காலனி அஸோஸியேஷனே ரெப்ரெஸண்ட் பண்ணியிருக்கலாம். அதை விட்டுவிட்டுத் தனிப்பட்ட முறையிலே பாகவதருக்கும் அம்மிணி அம்மாளுக்கும் நீங்க நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டியதில்லை. ஆட்களை அடுத்தடுத்து விரோதிச்சுக்கறது. ரொம்பச் சுலபம். ஆனா நட்பையும் நல்லெண்ணத்தையும் திரும்பச் சம்பாதிக்கிறது அத்தனை சுலபமில்லே"--என்றார் சங்கத் தலைவர்.

கண்ணன் அதற்குமேல் அவரிடம் மன்றாடிக்கொண்டு நிற்கவில்லை. உடனே வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டான். மகிழ்மாறனின் தமிழர் படைக்கு ஒரு பத்து ரூபாய் நன் கொடை கொடுத்துப் பட்டியலில் முதல் பேராகத் தன் பெயரை எழுதித் தொலைத்தது இவ்வளவு பெரிய வம்பில் வந்து முடியும் என்று அவன் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.

அந்த மனிதன் பத்தை நூற்று ஒன்றாகத் திருத்திக் கொள்வதாகச் சொல்லிவிட்டு ஆயிரத்து ஒன்றாகத் திருத்திக் கொள்ளப் போகத் தானே பணம் கொடுத்துக் காலனிவாசிகளுக்கு எதிராகப் புலவர் வகையறாவைத் தூண்டிவிட்ட மாதிரி ஆகிவிட்டது.

ஆயிரம் ஆண்டுகள் சிரமப்பட்டுச் சேகரித்த நல்லெண்ணத்தையும், நன்னம்பிக்கைகளையும் அரை, நொடியில் தவிடு பொடியாக்கிவிடுகிற 'மகத்தான திறமை' சிலருக்கு