பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

முள்வேலிகள்

அவருக்கு விளக்கம் சொல்லச் சந்தர்ப்பம் தந்து அவரது விளக்கம் நியாயமாயிருந்தால் அவரே செயலாளர் பதவியில் தொடர வாய்ப்பளிப்பதுதான் முறை-என்று பாகவதர் குறுக்கிட்டது கண்ணனுக்கு ஆச்சரியமளித்தது. அதை விடப் பெரிய ஆச்சரியம், "பாகவதர் சொல்றதுதான் என் அபிப்ராயமும்! அவசரப்பட்டுக் காரியதரிசியை மாத்த வேண்டியதில்லை" -என்று அம்மிணி அம்மாளும் தொடர்ந்த போது கண்ணனின் ஆச்சரியம் இன்னும் அதிகமாயிற்று. அப்போது மகிழ்மாறன் கண்ணனின் காதருகே வந்து முணு முணுத்தார். "அத்தனையும் வேஷம்! நம்பி ஏமாந்து போயிடாதீங்க...இவங்க துாண்டிவிட்டுத்தான் இத்தனையும் நடக்குது. சும்மா உங்க கண் முன்னாலே இப்பிடி உங்களை ஆதரிக்கிறமாதிரி நாடகமாடருங்க."

"என் மேல் என்ன குற்றம்னே சொல்லாமல் தீர்மானம் கொண்டு வர்ரப்போ நான் எப்படி விளக்கம் சொல்லமுடியும்?" -கண்ணன் இப்படி எழுந்து கேட்கவும் கூட்டத்தில் மூலைக்கு மூலை ஆத்திரமான குரல்கள் கிளம்பின. அங்கே கண்ணனுக்கும் புலவருக்கும் கடுமையான எதிர்ப்பு இருந்தது. அவர்களை எழுந்து பேசவிடாத அளவு கூட்டம் ஆத்திரமாயிருந்தது. ஏதோ எழுந்து பேச முயன்று முடியாமல் போய்த் திணறியகண்ணன், "நீங்க உங்க இஷ்டப்படி முடிவு பண்ணிக்கலாம்"- என்று நிராதரவாக அப்படியே உட்கார்ந்து விட்டான். வேறு எதுவும் செய்ய முடியாத நிலைமை அவனுக்கு.

"அதெல்லாம் நீங்களா முடிவு பண்ணின ஒண்னும் சட்டப்படி செல்லாது. முறைப்படி தீர்மானத்தை ஒட்டுக்கு விட்டாகணும்" என்று புலவர் ஆவேசமாக எழுந்து கத்தினார். அவர் அப்படிச் செய்ததும் கண்ணனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அவரை அவனால் தடுக்கவும் முடியவில்லை.

தலைவர் எழுந்து கூட்டத்தை அமைதியாயிருக்குமாறு வேண்டிவிட்டு, இப்போது இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் அனைவரையும் கை தூக்கு