பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

88

திருப்தியில்தான் இக்கடிதத்தை அவன் எழுதினான். போலீஸ் இலாகாவிலிருந்து ஒரு ஞாயிறு காலை கண்ணனின் அந்தப் புகார்க் கடிதத்தையுப் எடுத்துக் கொண்டு ஓர் இன்ஸ்பெக்டர் கண்ணனைத் தேடி வந்தார். அவர் பாகவதரை எச்சரிப்பதற்குப் பதில் கண்ணனுக்குத்தான் அறிவுரை கூறிவிட்டுச் சென்றார்.

"இப்படி எல்லாம் புகார் செய்யறது உங்களுக்கே நல்லா இருக்கா சார்? ஏதோ படித்த பெரியவர் மத்தவங்க ஒத்துழைப்போட பஜனை பாடினால் அதைப் போய்ப் போலீஸுக்கு எழுதறீங்களே சார்? இப்படி விஷயத்திலே நீங்களே பரஸ்பரம் அனுசரிச்சுப் போறதுதான் நல்லது. கண்ட கண்ட பொதுக் கூட்டத்து மைக் கூப்பாடும், சினிமாப் பாட்டும் காதைத் துளைக்காம இந்த மட்டிலாவது பக்திப் பாடலக் கேட்கக் குடுத்து வச்சிருக்கேன்னு சந்தோஷப்படுங்க.

கண்ணனால் அவரை மறுத்து எதுவும். பேச முடியாது போயிற்று.

12

ய்யப்பன் நகர் நலன் நாடுவோர் சங்கத்திலிருந்து தன்னை வெளியேற்றுவதற்கும், தன் மேல் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கும் நேர்ந்திரா விட்டால் கண்ணனின் மனத்திற்குள் இவ்வளவு தீவிர வெறுப்பும் கசப்பும் ஏற்பட்டிருக்கப் போவதில்லை.மற்றவற்றை எல்லாம் அவன் நாளடைவில் மறந்திருப்பான். மன்னித்திருப்பான். பழகிச் சகித்துக் கொண்டிருப்பான்.

ஆனால் சங்கத்திலிருந்து தன்னை வெளியேற்றியே தீருவதென்று பணத் திமிர் பிடித்த அம்மிணியம்மாளும், தன் விரோதியான பக்கத்து வீட்டுப் பாகவதரும் சதி செய்