பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

87

அடுத்த வீட்டில் புலவரையும் அவருடைய தம்பியர் பட்டாளத்தையும் வெளியிலேயே நிறுத்திவிட்டு, "சார், நீங்க மட்டும் ஒரு நிமிஷம் உள்ளே வர்றீங்களா?'--என்று கண்ணனை மட்டும் தனியாக உள்ளே கூப்பிட்டார் அந்த வீட்டுத் தலைவர். கண்ணன் மட்டும் உள்ளே சென்றதும், "ஏதாவது வேணும்னு நீங்க மட்டும் தனியா வரப்பிடாதா?, இந்தப் புலவரோட கூட வந்திருக்கிற பையன்கள் எல்லாருமே பேட்டை ரவுடிங்க! அதிலே ஒருத்தன் நீல பனியன் போட்டிருக்கானே, அவன் முந்தா நாள் சுவரேறிக் குதிச்சு எங்க வீட்டுத் தென்னை மரத்திலே ஏறித் தேங்காய் திருடினவன். இவங்களோட எல்லாம் நீங்க வரலாமா மிஸ்டர் கண்ணன்?" என்று அவனைக் கண்டித்தார்.

ஒரே ஒரு வீட்டில் மட்டும் எதுவும் அட்டி சொல்லாமல், "நாங்க வெல்ஃபேர் அஸோஸியேஷன்லியும் மெம்பர்தான். இருந்தாலும் உங்களுதிலேயும் சேர்ந்துக்கறேன்" என்று. பணத்தை எடுத்துக் கொடுத்தார்கள்.

இன்னொரு வீட்டில் புலவரைச் சுட்டிக் காட்டி, "இவர் அடிக்கடி நோட்புக்கும் கையுமா ஏதாவது வசூலுக்கு வந்துக்கிட்டே இருக்காரே சார்? எதுக்குன்னு குடுக்கிறது?" என்று குறைப்பட்டுக் கொண்டார்கள்.

வேறு சில வீடுகளில் உட்கார வைத்து நிதானமாகப் பேசிப் பழைய அஸோஸியேஷனை விட்டுக் கண்ணன் வெளியேறியிருக்கக் கூடாது என்று அவனுக்கு அறிவுரை கூறி அனுப்பினார்கள். :

"இவர்தானே சுவர்களில் தாரினாலே பெரிது பெரிதாக எழுதற ஆள்?" என்று ஒரு தினுசாகச் சிரித்தபடி புலவரைக் காட்டிச் சிலர் கேட்டபோது கண்ணனுக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போல இருந்தது.

"பாகவதர் மாதிரிப் பெரியவங்களெல்லாம் இருக்கிறது நம்ம காலனிக்கே பெருமை சார்! நீங்க சொல்ற அஸோஸி