பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பா.

7


நண்பனோ மேலும் கிண்டலாக மனத்தில் தைக்கிற மாதிரிச் சொன்னான்:

"நாளைக்கு உன் வீட்டை அடையாளம் சொல்றவங்களே, அந்த 'ரெகார்ட் டான்ஸ்' பொண்ணுங்க வீட்டுக்குப் பக்கத்து வீடுன்னோ, 'ஒருமாதிரி நாலைஞ்சு பொண்ணுங்க இருக்குதே அதுக்குப் பக்கத்து வீடுன்னோ'தான் சொல்லப் போறாங்க."

"முன்னாடி நீயே நாட்டியம்னு சொன்னியே, இப்போ திடீர்னு 'ரெக்கார்ட் டான்ஸ்'னு சொல்றே?’’

"நாட்டியம்னு சும்மா ஒரு கெளரவத்துக்காக அவங்க போர்டு மாட்டியிருக்காங்க. ஆனா சாஸ்திரிய நாட்டியம்னா வீசை என்ன விலைன்னுகேட்பாங்க.பாலசரஸ்வதியா பாழ் போகுது? சினிமாவிலே வர்ற சீப் சாங்ஸுக்கு 'எலந்தப் பயம்-எலந்தப் பயம்’னு வருமே அதுமாதிரிப், பாட்டை ரெக்கார்டுலே சுத்த விட்டுக் கையைக் காலை ஆட்டிக் கவர்ச்சியா ஆடினாக் கூட்டம் விசிலடிச்சிக்கிட்டு வாயைப் பொளந்து பார்க்கும். ரூவா நோட்டு, காசு எல்லாம் கூட வீசி எறிவாங்களே."

"அதுலே சம்பாதிச்சே வீடு வாங்கிட்டாங்களா?."

"அதுன்னா அதுமட்டுமா? இன்னும் பலதும் பண்றாங்க. பணம் குமியுது."

"வீட்டு வசதி போர்டு யாருக்கு வேணும்னாலும் வீடு அலாட் பண்ணலாம். அதை நாம எப்படி யப்பா தடுக்க முடியும்? கெளரவமான குடும்பங்களுக்கு நடுவிலே இப்படிக் கண்ட கண்ட ஆட்களும் கூட வந்து குடியேறிடு வாங்க.நடுவிலே நாம தான் கிடந்து அவஸ்தைப்படனும்."