பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

91

13

ரு நாள் காலையில் கண்ணன் அலுவலகம் போன பின் ஒரு மாபெரும் தலைவரின் மறைவை முன்னிட்டுப் பிற்பகல் திடீரென விடுமுறை விட்டுவிட்டார்கள். அவன் எதிர்பாராத விதமாக இரண்டரை மணிக்கே வீடுதிரும்ப நேர்ந்து விட்டது. அவன் அவ்வளவு சீக்கிரம் வீடு திரும்புவான் என அவன் மனைவி சுகன்யாவே எதிர்பார்த்திருக்க முடியாது. காரணம் வழக்கமாக அலுவலக நாட்களில் அவன் சாதாரணமாக மாலை ஆறரை-ஏழு மணி சுமாருக்குத்தான் வீடு திரும்ப முடியும். .

திடீரெனக் காலமாகிவிட்ட மாபெரும் தலைவர் ஒருவரின் பிரிவால் அறிவிக்கப்பட்ட திடீர் விடுமுறை அன்று அவனேப் பிற்பகலிலேயே வீடு திரும்பும்படி செய்திருந்தது.

ஆனால் அப்போது சுகன்யாவோ குழந்தை கலாவோ வீட்டில் இல்லை. வீடு பூட்டியிருந்தது. குழந்தை கலா படிக்கும் பள்ளிக்கூடம் 'ஷிப்ட்' முறையில் நடப்பது, காலை 8 மணி முதல் 12 மணி வரை ஒரு வழிப்ட். பின்பு 2 முதல் 6 வரை ஒரு வசிப்ட். அதில் கலா முதல் ஷிப்டில் படிப்பதால் அவளும் இதற்குள் வீடு திரும்பியிருக்க வேண்டும். இருந்தும் மனைவியும் குழந்தையும் எங்கே போயிருப்பார்கள் என்று அவனுக்குத் திகைப்பாயிருந்தது. ஏதாவது கடைக்குப் போயிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு வீட்டு வாசலில் தயங்கி நின்றன் தெருவில் பால் பூத்திலிருந்து வீடுகளுக்குப் பால் கவர்களை வாங்கிக்கொண்டு போய்க் கொடுக்கும் வேலைக்காரக் கிழவி ஒருத்தி தற்செயலாக எதிர்ப்பட்டாள்.

அம்மிணி அம்மாள் வீட்டில் போய்ப் பால் கவர்களைக் கொடுத்துவிட்டு வெளியே வந்த அந்த வேலைக்காரக் கிழவி, :உங்க வீட்டு அம்மா உள்ளே குழந்தையோட உட்கார்ந்து வீடியோ பார்த்துக்கிட்டிருக்காங்க... நீங்க வந்திட்டீங்கன்னு