பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
88

களது சீமை என்பதற்கு அடையாளமாக போர்த்துகேஸியர் மதுரை நாயக்கருச்கு ஆண்டுதோறும் ஒரு சிறிய தொகையை மட்டும் அன்பளிப்பாக அளித்து வந்தனர். அவர்களுடைய வளமையான வாணிபத்துடன் மன்னார் வளைகுடா முத்து சிலாபத்திலும் அவர்களுக்கு பெரும் தொகை லாபமாக கிடைக்கும் பொழுது ஒரு சிறு தொகையை கப்பமாகச் செலுத்துவதில் அவர்களுக்கு எவ்வித சிரமும் இல்லாதிருந்தது.[1]

என்றாலும், அந்நிய ஆதிக்கம் மிகுந்த இத்தகைய சூழ்நிலை தெற்கு கடற்கரையில் உருப்பெறுவதை உணர்ந்தார் திருமலை மன்னர் (கி.பி. 1623-59) கடல் வலிமையிலும் வாணிபத்திலும் போர்த்துக்கீஸியருக்குத் தக்க போட்டியாளராக விளங்கிய காயல் நகர இஸ்லாமியர்களை அணுகினார். காயலை மீண்டும் சிறந்த துறைமுகமாக நிலைபெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டதுடன் அதற்கு ஆவன அனைத்தையும் உதவினார். இதனால் மகிழ்ச்சியடைந்த இஸ்லாமியர், பெருத்த அளவில் அங்கு குடி புகுந்தனர். கடற்கரை முழுவதும் அவர்களது பல்வகையான கலங்கள் நிலை கொண்டன. பிள்ளை மரைக்காயர் என்ற தமிழக இஸ்லாமியக் குடிமகன் அரசாங்க பிரதிநிதியாக அந்தப் பகுதிக்கு திருமலை மன்னரால் நியமனம் பெற்றார். அவரது கெளரவ பணிக்கு திங்கள் தோறும், அறுமது சக்கரம் பணக்கொடை வழங்கவும் மன்னர் ஏற்பாடு செய்தார். யாழ்ப்பாணத்திலும், துரத்துக்குடியிலும், போர்த்துகீஸியரது குடியிருப்பிற்கு அண்மையில் தங்கி வாழவும் மன்னார் வளைகுடாவில் முத்து விளையும் பகுதிகளைக் கண்காணித்து வரவும் ஏற்பாடு செய்தார்,[2] நாயக்க மன்னரது அரசியல் சேவையில் இஸ்லாமியரது ஈடுபாட்டிற்கு இதைவிட வேறு சான்று என்ன வேண்டும்.

மேலும் மதுரைக் கோட்டையின் பிரதான காவல் பெறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தது ஷெய்கு ஹஸீன் என்ற கிர..தார். அவரது இயற்பெயர் ஷெய்கு முகம்மதுஷா ஆகும். பணி-


  1. Ibid - P. 1 38.
  2. Arunachalam S. - History of Pearl Fishery in Tamil coa (1952) P. 1