பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


14

சேதுபதிகள் ஆட்சியில்


மதுரை நாயக்க மன்னர்களுக்கு சம காலத்தவராக இராமநாதபுரம் சீமையில் தன்னரசு ஆட்சி செய்தவர்கள் சேதுபதிகள் என்ற மறவர் குடிப் பெருந்தலைவர்கள். முன்னூறு கிலோ மீட்டருக்கும் கூடுதலான கீழைக் கடற்கரைக்கு சொந்தக்காரரான அவர்களது நாடு, வரலாற்றுப் பெருமையுடையது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்தக்கடற்கரை யவனர்களுக்கும் யூதர்களுக்கும் அறிமுகமாகி இருந்தது என்பதை அண்மையில் அழகன்குளம் அகழ்வில் கிடைத்த ரோமப்பேரரசரது நாணயங்களும் வண்ணக்கல்மணிகளும்.[1] பெரியபட்டினம் அகழ்வில் கிடைத்த யூதர்களது உறிப்ரூ மொழிக்கல்வெட்டும்[2] உறுதிப்படுத்துகின்றன. இன்னும் உலகப் பயணிகளான தாலமியும், பிளினியும் குறிப்பிடுகின்ற சிறந்த கடற்பட்டினங்களான மோரெல்லா, அற்றகாரு ஆகிய ஊர்களும் இந்தக் கடல்பகுதியில் இருந்து கடல் கோளினால் அழிந்து மறைந்துவிட்டன.

சேது நாட்டின் கடற்கரைப்பகுதிகளில் பன்னிரண்டு பதின் மூன்றாவது நூற்றாண்டுகளில் அராபிய வணிகர்களது அஞ்சு வண்ணங்கள் அமைந்து, அந்தப்பகுதியின் வணிகப் பொருளான முத்தையும், கைத்தறித் துணிகளையும் கீழை மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உதவின. அத்துடன் அந்தப் பகுதியில் சமயப் பணிகளில் ஈடுபட்ட சான்றோர்களுக்கும் பேராதரவாக இருந்து வந்தன. தங்களது நாட்டில் குடியமர்ந்த அஞ்சு வண்ணத்தாரி


  1. Nagasamy, Dr. R. “The Hindu" - 26.10.1986
  2. ARE - 35 (B)/1942-43