பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

மகன் ஒருவருக்கு அவரது சிறப்பான வீரச்செயலுக்காக, வெற்றியாளன் என்ற பொருளில் சேதுபதி மன்னரால் “விஜயன்” என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது. அந்தக் குடும்பத்தின் இன்றைய தலைமுறையினரும் கூட தங்களது பெயருக்கு முன்னால் விஜயன் என்ற அந்த விருதுச் சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களைப் போன்று போகலுார் கிராமத்தைச் சேர்ந்த கனி ராவுத்தர் என்பவர் சேதுபதி மன்னரால் "சேர்வை” என்ற சிறப்புப்பட்டம் அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டதுடன், இன்றைய கன்னிராஜபுரம் (முதுகுளத்துார் வட்டம்) என்ற கிராமமும் அவருக்கு செல்லத்தேவர் சேதுபதி என்பவரால் தானமாக வழங்கப்பட்டது.[1] அந்த கனி சேர்வையின் வழியினர் இன்றும் அந்த "சேர்வை" என்ற சிறப்பு விகுதியைத் தங்களது இசுலாமியப் பெயருடன் இணைத்து பயன்படுத்தி வருகின்றனர்.

சேது நாட்டுக்குடிகளில் இசுலாமியர் சிறுபான்மையரில் பெரும்பான்மையராக இருந்து வந்தனர். இப்பொழுதும் இருந்து வருகின்றனர். பெரும்பாலும், வியாபாரத்திலும் நெசவிலும், சிறிய அளவினர் கடல் தொழில். விவசாயம், இரும்பு, செம்பு, வார்ப்பு தொழிலிலும் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் கீழ் நிலையில் இருந்த சாதாரண இசுலாமியர், நெவுத் தொழிலில் ஈடுபட்டு இருந்ததைப் பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இராமநாதபுரம், கீழக்கரை, எக்ககுடி, பனைக்குளம், கமுதி, கடலாடி, அபிராமம், முதுகுளத்தூர், பரமக்குடி, கோட்டைப் பட்டினம் கிழக்கரை, இராமநாதபுரம் வெளிப்பட்டினம் ஆகிய ஊர்களில் இசுலாமியர் நெசவுத் தொழிலிலும், சாயங் காய்ச்சுதலையும் மேற்கொண்டு இருந்ததாக இராமநாதபுரம் சமஸ்தான மானுவல் தெரிவிக்கின்றது.[2] அந்தப்பகுதிகள் இன்றும் - "பாவோடிகள்" எனப் பல ஊர்களில் குறிப்பிடப்பிடுகின்றன. இராமநாதபுரம் சீமையின் கைத்தறி உற்பத்தியை நேரில் பார்வையிட்டு, கும்பெனித் தலைமைக்கு, கும்பெனியாரது நாகூர்


  1. Madurai District Reconds - Vol 4669. p. 90, 91.
  2. Rajaram Rao-T. Manual of Ramnad Samasthanam (1828)P.P. 160. 17O. 175