பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

வாஞ்சையை “நமது” என்ற சொல் மிகவும் அழுத்தமாக வலியுறுத்துகிறது.[1]

மேலும் கி.பி. 1759ல் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்று இந்த நெருக்கத்தை காலமெல்லாம் நினைவூட்டுவதாக உள்ளது. சேது மன்னர்களது அனுமதியுடன் பாம்பனிலும், கீழக்கரையிலும் தங்களது பண்டக சாலைகளை டச்சுக்காரர்கள் அமைத்து, மன்னார் வளைகுடாவில் வணிகத்தை வளர்த்து வந்த நேரம். இலாபத்தைக் கண்டு மகிழ்ந்த அவர்கள் தங்கள் பண்டக சாலைகளைச் சுற்றி முதலில் முள்வேலிகளை அரண்களாக அமைத்தனர். அடுத்து, சிறு கற்கோட்டைகளைப் போன்று பாதுகாப்பு நிலைகளுடன் அதனைப் பலப்படுத்தினர். நிலத்தில் நிகழ்த்திய இத்தகைய ஆக்கிரமிப்புடன், அமையாமல் நீரிலும், அவர்கள் தங்களது கைவரிசையை காட்டினர். கி.பி. 1750ல் மன்னாரிலிருந்து இராமேஸ்வரத்திற்கு கொட்டைப்பாக்கு, அரிசி, நெல், நல்ல எண்ணை ஆகியவற்றை ஏற்றிவந்த பாய்மரக் கப்பலை டச்சுக்காரர் தங்களது அனுமதி பெறாமல் பயணத்தை மேற் கொண்டதாக காரணம் காட்டி கைப்பற்றினர். அதனுடைய சொந்தக்காரர், தாம் சேது நாட்டைச் சேர்ந்த கோட்டைப் பட்டினவாசி என்றும், சேது மன்னரது அனுமதியுடன் செல்வதாக விளக்கம் சொல்லியும் அதனை டச்சுக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

அடுத்து, மன்னாரில் இருந்து கீழக்கரைக்கு வந்து கொண்டிருந்த டச்சுக்காரரது தோணியை சேதுபதியின் ஆட்கள் தடுத்து கைப்பற்றினர். இரு தரப்பிலும் ஏற்பட்ட இத்தகைய ஆத்திரம் மூட்டும் நிகழ்ச்சிகளினால் பிரச்சினை உணர்ச்சி வயமானதாகிவிட்டது. தூத்துக்குடியிலிருந்து டச்சுக்காரரது படையணி கீழக்கரைக்கு வந்தது. சேதுமன்னரது படையணியொன்றும் கிழக் கரையில் உள்ள டச்சுக்காரது பண்டகசாலையைச் சூழ்ந்து, பிரங்கியினால் அதனைத் தகர்த்து எரியும் முயற்சியை மேற்கொண்டது. சமாதானம் பேசவந்த டச்சுத் தரப்பினரும் இராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். பேச்சு வார்த்தை


  1. சேதுபதி மன்னர் செப்புபட்டயம் எண். 28 (இராமேசுவரம் திருக்கோயில் கும்பாபிஷேக மலர் — 1965)