பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

கள்முறிந்து பெரும் மோதல் ஏற்படும் நிலையில் சேதுமன்னரது நெருங்கிய நண்பரான கிழக்கரை வணிகர் தம்பி மரைக்காயர் என்பவரது தலையீடும் தளராத முயற்சியும் மன்னருக்கும் மாற்று நாட்டாரான டச்சுக்காரருக்கும் இடையில் பெரும் போர் ஏற்படாமல் தடுத்ததுடன், மீண்டும் அவர்கள் சமூகமான சூழ்நிலையில் வேந்தர்-வணிகர் என்ற உறவுகளை நீடிப்பதற்கு உதவின.[1]

சைவநெறியில் திளைத்து வாழ்ந்த, சிறந்த சிவனடியார்களான சேதுபதி மன்னர்கள், இசுலாத்தை வேற்று நாட்டு சமயம் என விகற்பமாக எண்ணாமல், சமயப்பொறையுடன் நடந்து வந்தனர். அதனால் அவர்களது சீமையில் இசுலாம் தழைத்தது. ஆனால், அதே காலகட்டத்தில், மறவர் சீமையில் நிலை கொள்ள முயன்ற இன்னொரு வேற்றுச்சமயமான கிறித்தவ மதத்தை வேரோடு பறித்து வீழ்த்த சேதுபதிகள் கொண்ட ஒற்றம் - குறிப்பாக அந்தோணி கிரிமினாலினி என்ற இத்தாலிய பாதிரியாரது வேதாளை என்ற படுகொலை - கி.பி. 1549 ஜான் டி. பிரிட்டோ சாமியார் ஒரியூரில் சிரச்சேதம் கி.பி. 1792ல் ஆகிய கறும் புள்ளிகளை வரலாற்றில் பார்க்கும்பொழுது, இசுலாமியரிடம் அந்த மன்னர்கள் காட்டிய சகோதர வாஞ்சை, அன்பு பரிவு, பாசம் ஆகியவை நமமை பிரமிக்கச் செய்கின்றன. இங்ஙனம், நாட்டின் வளஞ்சேர்க்கும் நல்லியல்பு வணிகர்களாகவும் அரசியல் சாமந்தர்களாகவும் இசுலாமியர், தொடர்ந்து விளங்கினர் என்பது இந்த நிகழ்ச்சிகளால் பெறப்படுகிறது.


  1. Seshadri Drr S. - Sethupthis of Ramnad (un Published Thesis) pages. 96-97,