பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101

தொழிலில் ஈடுபட முடியாத நிலையை உணர்ந்த பரங்கிகள், பொறுமையாக சூழ்நிலைகளை கவனித்து வந்தனர். முத்துக்கள் வணிகத்தைப் பற்றிய அவர்களது பொறாமையும் பேராசையும் வளர்த்தன.

மன்னார் வளைகுடாவில் கிடைத்த முத்துக்களைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. பாண்டிய நாடு முழுவதையும் வெற்றி கொண்ட ராஜராஜ சோழனது (கி.பி. 985-1012) கல்வெட்டுக்களிலும் இந்த முத்துக்களைப்பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வட்டம், அனுவட்டம், ஒப்புமுத்து, குறுமுத்து, கோத்தமுத்து, நிம்பளம், பயிட்டம், அம்பு, முதுங்கறடு, இரட்டை, சப்பத்தி, சிவந்த நீர், குளிந்த நீர் என்பன அவை.[1] ஆனால் இவைகளைப் பற்றி முதல் முறையாக எமுதிய வெளிநாட்டார் அல்இத்ரிசி (கி.பி. 1154) என்ற அரபு நாட்டார். கி.பி. 1292ல் பாண்டிநாடு வந்த உலகப் பயணி மார்க்கோ போலோ, மன்னார் வளைகுடாவில் பத்தலாரில் - (கப்பலாறு - பெரியபட்டனம்) ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் முத்துச்சிலாபம் என்ற முத்துக்குளித்தலை நேரில் பார்வையிட்டு, அவரது குறிப்புகளில் விவரம் தந்துள்ளார்.[2] அவரைத் தொடர்ந்து தமிழகம் வந்த பிரையர் ஜோர்தனஸ் என்ற பிரஞ்சு நாட்டு பாதிரியாரும் வாங்-தா-யூவன் என்ற சீனப் பயணியும் முத்துச் சிலாபம் பற்றிய குறிப்புகளை வரைந்துள்ளனர்.[3]

முத்துக்குளித்தலில் மதுரை நாயக்க மன்னர் 96 1/2 கல்லும் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் 59 கல்லும் போட்டு முத்துக் குளிக்கும் உரிமை பெற்று இருந்தனர். திருமலைமன்னர் அவருக்குரிய கல்லில் பத்துக்கல் போட்டு முத்துக் குளிக்கும் உரிமையை, அவரது பிரதிநிதியான காயல்பட்டினம் நாட்டாண்மை "முதலியார் பிள்ளை மரைக்காயருக்கு", அளித்து இருந்தார்.[4] திருமலை மன்னரிடம் காயல்பட்டினத்து மரைக்காயருக்கு. அந்த


  1. நாகசாமி Dr. ஆர் - தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுகள் (1969) பக். 13, 44.
  2. Arunachalam-History of Pearl fisheries 1952 p. 63.
  3. I bid p.p. 78:80
  4. I bid