பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

அளவிற்கு பெரும் செல்வாக்கு இருந்தது. இந்த உரிமையை போர்ச்சுக்கியரும் பின்னர் டச்சுக்காரரும் மதித்த்னர் என்றால் மரைக்காயரது அறிவாற்றலையும் ஆள்விளை உடமையையும், என்னவென்பது? மதுரை மன்னரைப் போன்று சேதுபதி மன்னர்களும் தங்களுக்குரிய முத்துக்குளித்தல் உரிமையில் இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயிலுக்கும், திருப்புல்லணை ஜகநாதப் பெருமாள் கோயிலுக்கும் சலுகைகள் வழங்கி இருந்தனர்[1]. இந்த சலுகைகளின்படி அந்தக் கோயில்களுக்காக முறையே இராமேசுவரத்திலும் கீழக்கரையிலும் இருந்த மரைக்காயர் குடும்பங்கள், முத்துச்சலாபம் நடத்தினர், கி.பி. 1823ல் ஆங்கில கிழக்கிந்திய துரைத்தனம் இந்தச் சலுகைகளைப் பறிமுதல் செய்தது.

இராமேசுவரம் திருக்கோயிலுக்காக முத்துக்குளித்தவர்கள் இராமேசுவரம் சுல்தான் மரைக்காயர் குடும்பத்னர். அண்மைக் காலம் வரை, அந்தக்கோயிலின் தெப்பத்திருவிழாவிற்கு படகுகள் கொடுக்கும் "ஊழியம்" அவர்வழியினருக்கு இருந்தது. அந்தக் குடும்பத்தினரின் கண்ணியத்தையும் வாணிபச் செல்வாக்கையும் கருதிய திருக்கோயில் நிர்வாகத்தினர். கோயில் கருவறையின் திறவுகோல்களை அந்தக் குடும்பத்தினரது பொறுப்பில் கொடுத்து வைத்து இருந்தனர்.[2] இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் கோயிலுக்கு அரசினர் தர்மகர்த்தாக்கள் நியமனம் செய்த பிறகுதான் இந்த முறையில் மாற்றம் ஏற்பட்டது. முத்துச்ச லாபம் காரணமாக தோன்றிய இந்த மரபுகளை இங்கே குறிப்பிடுவது பொருத்தம் தானே !

தமிழக இசுலாமியர், முத்துக்குளித்தலில் மட்டுமல்லாது அவைகளை முறையாக விற்பனை செய்யும் வணிகத்திலும் ஈடுபட்டு இருந்தனர். அவர்களது வணிக நிலையங்கள் பாண்டி நாட்டுத் தலைநகரான மதுரையிலும், இராமேசுவரத்திலும் முத்துச்சாவடி அல்லது "முத்துப்பேட்டை” என வழங்கப்பட்டன. இராமேசுவரத்தில் இருந்த முத்துச்சாவடியில் விற்பனை செய்யப்பட்ட அழகிய முத்துக்கள், கேரளக்கரையில் உள்ள கொல்லத்


  1. சேதுபதி மன்னர் செப்பேடுகள்.
  2. சொக்கு சுப்பிரமணியம் - சிந்துபாடும் சேது நாடு - திருச்சிராப்பள்ளி. (வானொலி வடிவம்) 1985