பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தமிழகத்துச் சங்குகள் வங்காளம் சென்ற விவரங்களை அரபி பயணி அபூசெய்து (கி.பி.851) இத்தாலிய பயணி பார் போஸா (கி.பி.1565) பொக்காரோ (கி.பி.1644) கத்தோலிக்க பாதிரியார் மார்ட்டின் (கி.பி.1700) ஆகியோரது பயணக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.[1] பிரஞ்சு வணிகர் தாவர்ணியரது (கி பி. (1644/89) குறிப்புகள் அந்தச் சங்குகள் வங்காளத்தில் இருந்து இன்னும் வடக்கே பூட்டானுக்கும் திபெத்திற்கும் அனுப்பப்பட்டதை தெரிவிக்கின்றன[2].

மன்னர் வளைகுடாவில் கிடைக்கும் சங்குகளில், இலங்கை கடல்பகுதி சங்குகளைவிட தமிழக கடல் பகுதி சங்குகள் அளவிலும் பருமனிலும் பெரியதாக இருந்ததால், அவைகளுக்கு நல்ல சந்தை மதிப்பு இருந்தது. இந்தச் சங்குகள், தூத்துக்குடிக்கும் தொண்டிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியிலும் கடலூருக்கு அருகிலும் மிகுதியாகக் கிடைத்தன. இந்தச் சங்குகளை கடலில் குளித்து எடுக்கும் தொழிலில் அப்பொழுது இசுலாமியர்கள் ஈடுபட்டு இருந்தனர். ஏற்கெனவே முத்துக்குளித்தலில் தேர்ந்த அவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டது பொருத்தமானதொன்று இவர்களில் பெரும்பாலானவர்கள் பெரியபட்டினம் கீழக்கரை ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள்[3]. இலங்கையும் ஆங்கிலேயர் ஆட்சியில் அமைந்து இருந்த சென்ற நூற்றாண்டில் கூட, இலங்கைக்கடலில் சங்கு குளிப்பதற்கு பெரிய பட்டினத்து சங்குகுளித் தொழிலாளர்கள் அனுப்பப்பட்ட விவரம்தெரிய வருகிறது[4]. இன்னும் பெரியபட்டினத்தில் சங்குகுளிகாரத்தெரு என்ற வீதியும் சங்குகுளிக்கும் தொழிலில் அனுபவமும் உள்ள ஏராளமான இசுலாமியரும் உள்ளனர்.

மேலும் தமிழக இசுலாமியரது மரக்கலங்களில் இந்தச் சங்குகள் ஏற்றப்பட்டு வங்காளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த மரக்கலங்களை இயக்கிய தண்டல்களும் இசு


  1. Arunachalam-History of pearl Fishery of Tamil Coast(1952)
  2. Ibid
  3. கமால் - எஸ். எம். - இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக்குறிப்புகள் (1984) பக். 75
  4. Madura Dist. Records - vol. 4673. 15-8-1825.