பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், உள்நாட்டு வாணிபத்தில் கீழக்கரை சைய்யிது அப்துல் காதிர் மரைக்காயர் என்பவர் சிறப்புடன் இருந்ததை ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த வணிகப் பெருமகனைப் பற்றிய செய்திகள் கி பி.1789 முதல் கிடைக்கின்றன. இராமநாதபுரத்திலும், கீழக்கரையிலும் இவருக்கு பண்டக சாலைகள் இருந்தன. இரும்பு, ஒடு, மரம், தானியங்கள், தலைப்பாகைத்துணி, துப்பட்டா. கம்பளங்கள் ஆகிய வியாபாரங்களில் ஈடுபட்டு இருந்தார்.[1] அப்பொழுது இராம நாதபுரம் மன்னராக இருந்த விஜயரகுநாத முத்துராமலிங்க சேதுபதி (கி பி.1762-1795)யின் உற்ற நண்பனாகவும் இருந்தார் எனத் தெரிகிறது.[2]

வள்ளல் சீதக்காதி காலந்தொட்டு, கீழக்கரை இசுலாமிய தன வணிகர்களுக்கும் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு மிடையே நிலவிய நேச மனப்பான்மை காரணமாகவும், இராமநாதபுரம் சீமையெங்கும் வியாபாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அப்துல் காதிர் மரைக்காயரது பொருட்களுக்கு மாமூலான சுங்கவரி விதிப்பில், இருபத்து ஐந்து விழுக்காடு சலுகை அளிக்கப்பட்டு வந்தது.[3]சேதுபதி மன்னரைச் சிறையில் அடைத்து, ஆற்காட்டு நவாப்பின் பிரதிநிதிகளாக, அந்த நாட்டை ஆண்ட ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியார் காலத்திலும் இந்தச் சலுகை தொடர்ந்தது. அத்துடன் கடல் துறைகளிலும் கடற்கரைப்பட்டினங்களிலும் புதிதாக வணிக நிறுவனங்களை துவக்கி வணிகத்தை வளர்ப்பதற்கும் ஆற்காட்டு நவாப் முகம்மது அலி வாலாஜா" மரைக்காயருக்கு "பர்வானா" (அனுமதி உத்தரவு) வழங்கி இருந்தார்.[4] அதன் காரணமாக அப்துல் காதிர் மரைக்காயர் திருநெல்வேலிச் சீமையிலும் அவரது வாணிபத்தை விரிவுபடுத்தினார். காயல்பட்டினம், குல சேகரப்பட்டினம், வேம்பாறு ஆகிய ஊர்களிலும், வேறு பல


  1. Revenue Consultations — Vol. 62. A.p.p. 1796-9.
  2. Madurai Collectorate. Records - Vol. 1140 - 18-10-1802 p.141
  3. Ibid
  4. Madurai Collectorate Records. Vol. 1178 p. 4 to 71.