பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115

இடங்களிலும் பண்டகசாலைகளைத் நிறுவி இருந்தார்.[1] அத்துடன், இராமநாதபுரம் சீமையில் கும்பெனியார், குடிமக்களிடமிருந்து கிஸ்தி (தீர்வை)யாகப் பெற்ற ஏராளமான நெல்லை, அப்துல் காதிறு மரைக்காயரிடம் விற்று வந்தனர். இந்த நெல் விற்பனையில்" "ஏகபோக உரிமை"யால் பாதிக்கப்பட்ட மெய் ஜியர் என்ற டச்சு நாட்டு தானிய வியாபாரி, கும்பெனி தலைமைக்கு வரைந்துள்ள புகாரிலிருந்தும் [2] இன்னும் இராமநாதபுரம் கலைக்டராக இருந்த காலின்ஸ் ஜாக்ஸனது துபாஷான ரங்கபிள்ளை மீது எழுப்பப்ட்ட ஊழல் புகார் பற்றிய ஆவணங்களில் இருந்தும், இந்த விவரங்கள் தெரியவருகின்றன.[3]

இந்தக்கால கட்டத்தில், கீழக்கரை மாமுனா லெப்பையும், காயல்பட்டினம் சேகனா லெப்பை என்பவரும் நவமணி வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்த செய்திகளும் உள்ளன. இராமநாதபுரம் சேதுபதி மன்னர் இந்த தனவணிகர்களிடமிருந்து நவரத்தினங்கள் வாங்கிய விவரத்தை கும்பெனியாரது ஆவணமொன்று குறிப்பிடுகின்றது.[4] சேகனா லெப்பை என்பவர் அறிஞர் பெருமக்களால் "புலவர் நாயகம்" என போற்றப்பட்ட ஷெய்கு அப்துல் காதிர் நயினார் லெப்பை (சேகனாப்புலவர்) ஆலிமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஏனெனில் அவர், இசுலாமிய காப்பியங்களின் படைப்பாளியாக மாறுவதற்கு முன்னர்,அவரது தந்தை ஹபீபு முகம்மது லெப்பை மரைக்காயரைப் போல, முதலில் நவரத்தின வணிகராகவே வாழ்வைத் தொடங்கினார். இவர்களைத் தொடர்ந்து கீழக்கரையில் சேகு ஸதக்கத்துல்லா, முகம்மது காசீம் மரைக்காயர், ஹபீபு மரைக்காயர் போன்ற சில வணிகர்கள் பத்தொன்பதாவது நூற்றாண்டின் துவக்கத்தில் வாணிபத்தில் சிறந்து விளங்கினர் எனத் தெரிகிறது. அவர்களது பெரிய பண்டகசாலை கீழக்கரையில், கீழப்பண்டகசாலை


  1. Revenue Consultations vol. 91A. 15-12–1797 p. 45. 64
  2. Revenue consultations vol. 91A. p. 45, 61
  3. கமால் Dr. எஸ்.எம்-விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987) பக், 156-157
  4. Tamilnadu Archives-Revenue Consultations. vol. 62A p. p. 17, 96, 97