பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131

இருந்தார். பிறகு தலைநகருக்குப் புறப்பட்டார். "அவர் புறப்பட்டுச் சென்ற பிறகு பதினைந்து நாட்கள் நான் பட்டினத்தில் தங்கி விட்டு விசாலமான விதிகளையுடைய பெரிய நகரமான மதுரைக்குப் புறப்பட்டேன்". அந்த நகரை தனது கோநகராகச் செய்தவர் எனது மாமனார்-சுல்தான் ஷரிபு ஜலாலுத்தீன் அஸன்ஷா, தில்லியைப் போன்று தோற்றம் தரும்படி அதனை அக்கறையுடன் அவர் நிர்மாணித்தார். "தான் மதுரையை அடைந்தபொழுது, அங்கு ஒரு கொள்ளை நோய் பரவி இருந்ததைப் பார்த்தேன். பாதிக்கப்பட்ட மக்கள் விரைவாக மடிந்தனர். அந்த நோயினால் தாக்கப்பட்டவர் இரண்டு அல்லது மூன்றாவது நாளில் இறப்பு எய்தினர். எங்கும் நோயாளிகளையும் இறந்தவர்களையும் கண்டேன். இளைய அடிமைப் பெண்ணொருத்தியை விலைக்கு வாங்கினேன். உடல் நலிவு இல்லாதவள் என எனக்கு உறுதி கூறப்பட்டது. ஆனால் அடுத்த நாளில் அவள் இறந்து விட்டாள். சுல்தான் அஸன்ஷாவிடம் அமைச்சராகப் பணியாற்றிய நடுவரின் மனைவி என்னைச் சந்திக்க ஒரு நாள் வந்தாள். அவளுடன் எட்டு வயது நிரம் பிய சிறுவன் ஒருவனும் வந்திருந்தான், அறிவும் ஆற்றலும் மிக்கவனாக இருந்தான். தனது வறுமை நிலையைப் பற்றிச் அவள் சொன்னாள். அவருக்கும் அந்தச் சிறுவனுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பிவைத்தேன் அவர்கள் இருவரும் உடல் நலம் மிக்கவர்களாக காணப்பட்டனர். ஆனால் அடுத்த நாள், அந்த தாய் என்னிடம் வந்தாள். தனது மகள் திடீரென இறந்து விட்டதாகவும், அவனது அடக்கத்திற்குரிய துணிவேண்டும் (கபன்) எனக்கோரினாள். .... சுல்தான் மரணமடையும் பொழுது அவரது அத்தானி மண்டபத்திற்குச் சென்று இருந்தேன். நாற்றுக்கணக்கான பெண் பணியாளர்கள் நெல் குத்துவதற்காகவும் சமையல் பணிக் கெனவும் அழைத்து வரப்பட்டனர். அவர்களும் கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு ஆங்காங்கு தரையில் வீழ்ந்து மடிந்தனர்.

“சுல்தான் கியாஸுத்தீன் மதுரைக்கு திரும்பிய பொழுது, அவரது தாய், மனைவி, மகள் ஆகியோர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர் மூன்று நாட்கள் தங்கி இருந்தார். பிறகு அவர் ஒரு மைல் தொலைவில் உள்ள ஆற்றுக்குச்