பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

133

ருந்து தினாரையும், திரம்மாவையும் அவர்மீது சொரிந்தனர். சுல்தான் கியாஸ்தீனது நல்லடக்கம் ஆடம்பரமாக நடத்தப்பட்டது. அவரது புதை குழியருகே நாள்தோறும் திருமறை ஒதப்பட்டது. திருமறையின் பத்தாவது பகுதியை ஒதி முடித்த பின்னர், குழுவில் இருந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மக்கள் வயிறார உண்டனர். வந்து இருந்தவர்கள் தகுதிக்கு தக்கவாறு வெண் பொற்காசுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. நாற்பது நாட்கள் இவ்விதம் தொடர்ந்து நடைபெற்றன. இனி ஒவ்வோர் ஆண்டும் இதே மாதிரியான தருமம் மேற்கொள்ளப்படும்.... ... ...” *

மற்றுமொரு பயணியான வஸ்ஸாப், தமிழ்நாட்டு வணிகம் பற்றிய குறிப்புகளில்.[1]" ............... ஹிஜிரி ஆண்டு 692ல் மாபாரின் மன்னர் தேவர் இறந்து போனார். ஏராளமான செல்வங்களையும் அவர் விட்டுச் சென்று இருந்தார். ஏழாயிரம் பொதி மாடுகளில் ஏற்றபட்ட நவமணிகள், பொன், வெள்ளி ஆகியவை அவரையடுத்து பட்டமேறிய அவரது சகோதரர் பங்கிற்கு ஒதுக்கப்பட்டது. மாலிக் ஆஜம் தக்கியுத்தீன் முதன் மந்திரியாக தொடர்ந்து பணியாற்றினார். இன்னும் சொல்லப் போனால் ஆட்சியாளரான அவரது பெயரும் புகழும் ஆயிரம் மடங்கு உயர்ந்தன.

"வணிகம் மூலமாக ஏற்கனவே பெற்றிருந்த செல்வ வளதுடன், சீனத்தில்இருந்தும் இந்தியாவில் இதரப்பகுதிகளில் இருந்தும் மாபாருக்குள் எத்தகைய சாமான்கள், பொருட்கள், இறக்குமதி செய்யப்படவேண்டும் என்பதற்கு அவர் கட்டளையிட்டார். அவரது முகவர்களும் பணியாளர்களும் முதன் முதலில் தேர்வு செய்யும் வரை ஏனையவர்கள் அந்தப் பொருட்களை வாங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.அவருக்குத்தேவையான பொருட்கள் தேர்வு செய்யப்பட்டவுடன், அவைகளை அவருடைய கப்பல்களில் அல்லது மற்ற வியாபாரிகள் கப்பல்களில் அவரது சொந்தத்தீவிற்கு அனுப்பப்பட்டன. மாலிக் குல் இஸ்லாமின் தேவைப்பொருட்கள் தேர்வு செய்யப்பட்டு பெற்றுக் கொள்ளப்படும் வரை. ஏனைய வணிகர்கள் பேரம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. எஞ்சியவை கீழை,


  1. Ibid p. 165