பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

அல்லது உலோக வார்ப்புகளாக உருப்பெறவில்லை என்பதும், தெளிவு. பிற்காலத்தில்தான் பல்லவர்களும் பாண்டியர்களும், சோழர்களும் தங்களது ஆட்சிக் காலங்களில் பலவிதமான நாணயங்களை வெளியிட்டனர்.

அவையனைத்தும் காசு என்றே வரிசைப்படுத்தப்பட்டன. பொன்னாலான காசு, மாடை, பணம், கட்டி என வழங்கப்பட்டது. "வாசி, தீரவே காசு தாரீர்” என்பது ஏழாம் நூற்றாண்டு சம்பந்தரது தேவாரம். அவைகளை அடுத்து வெளியிடப் பட்ட செப்பு பணமும் காசு என்றே வழங்கப்பட்டது. இந்தச் சொல் பிற்காலத்தில் கயிக்சா (caisa) என போர்த்துகேசிய மொழியிலும் காசு (cashit) இணைத்துக் கொண்டதும் ஆகும்.

கி.பி. பதினான்காம் நூற்றாண்டு தொடக்கம் வரை, தமிழ்நாட்டுச் செலாவணியாக அரபிகளது தங்க நாணயமான தினாரு வெள்ளி நாணயமான திர்கமும், தமிழ் மக்கள் கைகளில் தவழ்ந்ததை பல கல்வெட்டுகளில் இருந்து தெரிய வருகிறது. மதுரை, தஞ்சை, திருப்பத்துார், அருப்புக்கோட்டை திருத்துறைப் பூண்டி குடுமியான்மலை. திருப்பராய்த்துறை, திருவடந்தை ஆகிய ஊர்க்கோயில் கல்வெட்டுக்களில் தினார், தினாரா எனவும், திர்கம் திரம்ம எனவும், பொறிக்கப்பட்டுள்ளன. இங்ங்னம் ராஜராஜன் விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன் ஆட்சியிலும், பராந்தகன் நெடுஞ்சடையன் ஸ்ரீவல்லபன், வீரபாண்டியன், மாறவர்மன் சடையவர்மன், சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலங்களிலும் அரபிகள் தமிழ் முஸ்லீம்களாக இருந்தது போன்று அவர்களது நாணயங்களான தினரும் திர்கமும், தமிழக நாணயங்களாக செலாவணியில் இருந்து வந்துள்ளன.

திருரா என்பது பொற்காசு, எழுபத்து ஒன்றரை பார்லி தானிய மணிகளுக்குரிய நிறை உடையதென்றும், கோதுமை தானிய மணிகள் அறுபத்து எட்டுக்குச் சமமானது என்றும், மித்கல் என்றும் அரபி மொழி நிறுத்தல் அளவையாக குறிக்கப்பெற்றுள்ளது. ஏழாம் நூற்றாண்டில், கிரேக்க நாட்டில் இந்த நிறைக்கு அறுபது மணிகள் சமமாகக் கொள்ளப்பட்டது. திரம்மா என்பது வெள்ளிக்காசு, அதற்கான நிறை பலவிதமாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இமாம் உமறு (அலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் இந்த நாணயம் பதினான்கு காராட் நிறை