பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மாவீரன் அலக்ஸாந்தரது சிந்து நதி படையெடுப்பிற்குப் பிறகு, இந்தச் சொல் இந்திய வரலாற்று நூல்களில் கிரேக்கர்களை மட்டும் குறிப்துடன், அவர்களது குடியிருப்புகள் யமுனை ஆற்றிற்கு மேற்கேயும் குஜராத் மாநிலத்திற்கு தெற்கேயும் நிலைத்து இருந்தன என்பதையும் சுட்டுகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள “ஜூனாகாத்” என வழங்கப்படும் கடற்கரைப் பட்டினம், யவனர்களது இருப்பிடம் என்ற பொருளில் வழங்கப்பட்ட “யோனாகர்” என்ற சொல்லின் திரிபு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. காரணம் அசோகனது ஆட்சியில் துஸஸ்பா என்ற யவனர். இந்தப் பகுதியில் ஆளுநராகப் பணியாற்றி இருந்ததும் யவனர்கள் இங்கு மிகுந்த எண்ணிக்கையில் வாழ்ந்து வந்ததும் ஆகும். இங்கனம், இந்திய நாட்டில நிலைத்துவிட்ட யவனர்கள் 'நம் யவன” என அப்பொழுது வழங்கப்பட்டதாக கர்லா கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.[1]

இதே காலத்திய கடைச்சங்க இலக்கியங்களில், தமிழகம் போன்ற யவனர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. “வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்” என முல்லைப்பாட்டும்,[2] அவர்களது “நன்கலம் தந்த தண்கமழ் தேரலை” புறப்பாட்டும்,[3] அவர்களது “பாவை விளக்கு”[4] “ஒதிம விளக்கு”[5] “மகர வினை” ஆகியவைகளை பெருங்கதையும், “பொன்னொடு வந்து கறியொடு பெயர்ந்த” அவர்களது “வினைமான் நன்கலத்தை” அகப்பாட்டு (எண். 140)ம் குறிப்பிடுகின்றன. மேலும், அவர்கள் “கடிமதில் வாயிற் காவலிற் சிறந்து


  1. Gopalachari. K - Early History of Andhra Country (1941) P. 25 - 29
  2. “மெய்ப்பை புக்க வெரு உவரும் - தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்”... முல்லைப்பாட்டு 60, 61.
  3. “இரவர்க்கு அருங்கலம் அருகாது ஈயா யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்”... ... புறநானூறு 56 : 18
  4. யவனர் இயற்றிய வினைமான் பாவை கையேந்தி ஐயகல் நிறைநெய் சொரிந்து” ... ... நெடுநல்வாட்டை102, 103
  5. வேள்வித் துணைத் தளச்சி யவனர் ஒதிம விளக்கின் உயர்மிசை கொண்ட ... ... பெரும்பானாற்றுப்படை 16 ... ... ... ... ... ... யவகை கைவினை