பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137

யுடையதாக அமைக்கப்பட்டது. இந்த இரண்டு நாணயங்களும் திருக்குர் ஆனில் சூரா 12:20ல் சொல்லப்பட்டுள்ளது. பின்னர் காஷ் (CASH) என ஆங்கிலத்திலும் பிற்காலத்தில் உருப்பெற்றுள்ளன.[1] தமிழகத்திற்கு அரபிகளது வாணிபத் தொடர்பு ஏற்பட்டவுடன் அந்த நாட்டு தீனார், திர்ஹம், நாணயங்கள் தமிழ்நாட்டில் தமிழக நாணயங்களாக பதினான்காவது நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அரபு நாடுகளுடன் வாணிபம் செய்த அரபிகளுடன் தமிழக மக்கள் கொண்டிருந்த நெருக்கமான நட்புச் சூழ்நிலையும் இத்தகைய பொருளாதார நாணயப் புழக்கத்திற்கு ஏற்ற காரணமாதல் வேண்டும்.

இந்த நாணயங்கள் ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கொங்கணத்திலிருந்து ஆந்திர கடற்கரை வரை வியாபித்திருந்த மேலைச் சாளுக்கிய அரசின் செலாவணியில் இருந்தன. அந்த காலக்கட்டத்தில், அங்கு அராபியர்கள் மிகுந்த அன்புடனும், மதிப்புடனும், நடத்தப்பட்டதை அப்பொழுது அங்கு பயணம் மேற்கொண்டிருந்த சுலைமான் போன்ற வரலாற்று ஆசிரியர்களது குறிப்புகள் சான்று வழங்குகின்றன.[2] தமிழகத்தின் வடக்கு எல்லையில் சாளுக்கிய அரசு அமைந்து இருந்ததின் காரணமாக அந்த நாட்டு அரசியல் செயல்பாடுகளின் செல்வாக்கினை பிரதிபலிப்பாக அரபு நாட்டு நாணயங்கள் தமிழ்நாட்டு செலாவணியில் ஈடுபடுத்தபட்டிருக்க வேண்டும். இந்த இரு காசுகளும் முந்தைய தமிழகத்தின் பழங்காசுடன் செலாவணியில் ஒருசேர வழங்கப்பட்ட செய்திகளும் உண்டு. ஒரு சில கல்வெட்டுகளில் இருந்து அரபு நாட்டு திரமத் (திர்கம்) திற்கு தமிழகத்தின் பழங்காசிற்கும் உள்ள மதிப்பினைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. "பழங்காசு முக்காலே மாகாணிக்கு, திரமம் ஒன்றே காலாகவும், அரைப்பழங்காசுக்கு திரமம் முக்காலும்” என ஒரு கால கட்டத்திலும், பழங்காக அரைக்கு திரமம் ஒன்றரையாக ஒரு சமயம் இருந்ததாகவும் செய்யாறு, கும்பகோணம், கல்வெட்டுகளில் காணப்படுகின்றன


  1. Appadorai Dr. A. Economic Condituions of S. India (130(AD - 1500AD) v.I.
  2. Md: Hussain Nainar-Arab Geographers Knowledge of S. indi,(1944)p.p. 162, 163