பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

145

யாக லெவை ராவுத்தன் என்பவரும் கலந்து கொண்டு இணக்கம் தெரிவித்திருப்பது தெரியவருகிறது.[1]

இன்னொரு நிகழ்ச்சி, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை சேர்ந்த அகமதுபேட்டை முஸ்லீம்களைப் பற்றியதாகும். அவர்கள் தாங்கள் வாணிகம் செய்யும் ஊர்களில், குற்றால நாதர் நித்திய பூசைக்கட்டளை வகையறாவுக்கு மகமைப் பணம் கொடுக்க கி.பி. 1788ல் இணங்கி எழுதிய பட்டயமாகும்.[2] இதோ அந்தப் பட்டய வாசகம்.

““சாலிவாகன சகாப்தம் 1710 ம் வருடம் செல்லா நின்ற கொல்லம் 964 ஆண்டு கீலக வருடம் கார்த்திகை மாதம் 25 ம் தேதி குற்றாலநாத சுவாமி கட்டளைக்கு அசரது வாவா சாயபு அகமது பேட்டை மணியம் இஸ்மாயில் ராவுத்தன் முதலான பலரும் எழுதிக் கொடுத்தபடி பட்டயமாவது, சுவாமிக்கு நித்திய விழா பூஜையில் கட்டளை வைத்துவரும்படி படித்தரப் படிக்கி, நடத்திவரும் வகைக்கு, நாங்கள் எல்லோரும் வகை வைத்துக் கொடுத்து ஏறு காற்று, இறங்கு காற்று வாகைச்சை ஒன்றுக்கு, மருவுருட் சட்டை ஒன்றுக்கு கால் மாகாணிப் பணம் வீதமும் நடையொறுக்கு மாகாணி பணம் வீதமும் இன்னொன்றுக்கு அரை மாகாணி வீதமும் இந்தப்படிக்கு திருநெல்வேலி காந்திமதியம்மன் சிறுகால மகிமை காந்திமதி மகிமைப் படிக்கு தென்காசி ஆமது பேட்டையில் உள்ள வனிதசேகர செங்கோட்டை, புலியறை, பண்புளி, கடையநல்லூர், சிவராமப் பேட்டை, சுரண்டைச் சந்தை, முதலான துறையிலும் மகமை வைத்துக் கொடுத்தபடியினாலே மாசம் மாசம் உள்ள பணத்தை வாணிபம் கணக்குப் பார்த்து வாங்கிக் கொண்டு சுவாமிக்கு கட்டளை என்றென்றைக்கும் நடத்தி வருவோமாகவும் ... ...”” என முடிவு பெறுகிறது அகமது பேட்டை இஸ்லாமியர் இணக்கம் தெரிவித்துள்ள அந்தப்பட்டயம்.[3]

இத்தகைய சமயப் பொறை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாகவும் பிற அரசியல் ஊக்குவிப்புகள் காரணமாகவும்


  1. List of Copper Plates No 65 A of Mr. A. Sewe II
  2. AR 43/1946 (C.P).
  3. AR 43 / 1946 (C. P)