பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

149

கி. பி. 1784ல் சிவகங்கை முத்த வடுக நாததேவரும்[1] இஸ்லாமியரது பள்ளிகளுக்கும், தர்ஹாக்களுக்கும் பல நிலக்கொடைகள் வழங்கிய செய்திகள் உள. இவை அனைத்திலும் சிறப்பான செய்தி, தமிழகத்தில் சமய ஒருமைப் பாட்டில் ஒரு சிறந்த சின்னமாக விளங்கும் நாகூர் ஆண்டகையின் தர்ஹாவில் கி.பி. 1753 ல் தஞ்சை மன்னன் துல்ஜாஜி, பல திருப்பணிகள் செய்ததுடன் அந்த தர்ஹாவின் பராமரிப்பிற்காக பதினைந்து கிராமங்களை வழங்கி இருப்பதாகும்.[2] கமுதி பள்ளிவாசளை நிருமாணிக்க 200 ஆண்டுகளுக்கு முன்னர் நல்லுத்தேவர் என்பவர் 78 ஏக்கர் நிலக்கொடை வழங்கினார். இவை போன்று தமிழ்ச் சமுதாயத்தில், தமிழக இஸ்லாமியர்களுக்கும். மற்றவர்களுக்கும் இடையில் நிலவிய சமூக ஒற்றுமை, செளஜன்யம், தொடர்ந்ததற்கான பல சான்றுகள் காலத்தால் அழிக்கப்பட்டு விட்டதால் அவை நமக்கு கிடைக்கவில்லை.

இங்ஙனம், தமிழ்ச் சமுதாயத்தில் இஸ்லாமியர்களது ஆத்மீக தேவைகளை மதித்து உதவிய இந்து சகோதரர்களுக்கு, தங்களால் இயன்ற வகையில் இஸ்லாமியர்களும் ஒத்துழைப்பும் உதவியும், நல்கிய செய்திகளை ஒரு சில ஆவணங்கள் அறிவிக்கின்றன. காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகளையும் அவரது காஞ்சி மடத்தைப் பற்றியும் அறியாதார் இருக்க முடியாது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இம்மடத்தில் பூசையும், அன்னதானமும் நடைபெறுவதற்காக தில்லி பேரரசர் பகதுர்ஷா 115 வராகன் தானம் வழங்கி கி.பி. 1710ல் ஆனையொன்று பிறப்பித்தார். செங்கை மாவட்டம் மேல்பாக்கம் கிராம வருவாயிலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு பாரசீக தெலுங்கு சமஸ்கிருத வாசகங்களுடைய அந்த செப்பேடு உள்ளது.[3] அவைகளில் இன்னொன்று சேலம் மாவட்டம் மின்னக்கல் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட ருக்மினி சமேத கோபால கிருஷ்ணன் ஆலயத்திற்கு, தமிழ் நாட்டின் வடமேற்குப் பகுதியை சில ஆண்டுகள் தமது ஆட்சிக்குள் வைத்திருந்த மைசூர் மன்னர் திப்புசுல்தான், ஆண்டுதோறும் 575 வராகன் மான்யம்


  1. A. S. S. I. Vol 4
  2. Rangacharya - List of inscriptions – vol. – 2 (1919) p. 13. 46
  3. GOPINATH RAO – Copper Plate Inscriptions — (1916) pp. 113-20x