பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

இவர் கிழக்கு ஆப்பிரிக்காவின் மலிந்தி நாட்டவர்.[1] அவரிடம் கடல்வழி, காட்டும் வரைபடங்களும், கடற் பயணத்திற்கான சிறந்த கருவிகளும் இருந்தன.

ஆதலால், பெருங்கடல்களைக் கடந்து செல்லும் பெற்றியில் தங்களுக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி பதினைந்தாம் நூற்றாண்டு வரை சிறப்பாக விளங்கியவர்கள் இந்த யவனர்களே (அரபிகள்) அவர்கள் இயக்கிய மரக்கலங்கள் உறுதியானவையாகவும் காற்று, நீர், வெய்யில், மழை ஆகியவைகளைச் சமாளித்துச் செல்லும் திறனுடையனவாகவும் இருந்தன. பெரும்பாலும் சிறு மரக்கலங்கள், ஒரே மரத்தினின்றும் குடைந்து உருவாக்கப்பட்டன. பெரிய கலங்கன் பல்வேறு மரத்துணுக்குகளைக் கொண்டு இணைத்து அமைக்கப்பட்டன. இரும்பு ஆணிகளைக் கொண்டு அவைகளை இணைப்பதற்குப் பதிலாக, மரப் பலகைகளை ஒன்றோடொன்று இணைத்து, அவை செயற்கையாக இணைக்கப்பட்டவையென்று சொல்ல முடியாதபடி ஒரே சீராகச் செய்யப்பட்டன. தேவையான பகுதிகளில் துளைகளை அமைத்து மரத்திலான ஆணிகளைப் பொருத்தி உறுதிபட அழுதினர். கீழ்க்கண்ட வகையினதாக[2] இத்தகைய மரக்கலங்கள் அவர்களால் பயன்படுத்தப்பட்டன.


அரபிப் பெயர் தமிழில் விபரம்

1.அல்மாதியா அலைமோதி ஒரேமரத்தாலானது
2. அத்தலாயா  வத்தை கரையோர உபயோகத்திற்கு
3. பர் காட்டிம்  படகு கரையோர உபயோகத்திற்கு
4. கெப்பல்  கப்பல் நெடுங்கடல் பயணத்திற்கு
5. சத்ரி  கப்பல் சாதாரண கடல்பயணத்திற்கு
6. சம்பானே  சாம்பான் சிறு படகு
7. பூஸ்கா  நெடுங்கடல் பயணத்திற்கு
8. ஜாவா  நெடுங்கடல் பயணத்திற்கு
9. கியாட்டு  பரிச்சல் நாழிபோன்ற வடிவமைப்பு

  1. பிறையன்பன் - கலையும் பண்பாடும் (இலங்கை-1963)பக்கம் :1
  2. Appadorai - Dr.A. – Economic Bisditions of TamilNadu (From 1000 AD to 1600 AD) voI. II p.8.