பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


22

கட்டுமானங்கள்


தமிழக இஸ்லாமியர்களான சோனகர்கள் தமிழ்ச் சமுதாயத்தில் வாணிபச் செருக்கினாலும், அரசியல் ஊக்குவிப்பு களாலும், வேறு எந்த நாட்டாரும் தமிழகத்தில் எய்தாத, எய்தி இயலாத இலக்கிற்கு வளர்ந்து உயர்ந்து நின்றதை வரலாற்றில் பார்க்கிறோம். இந்த வளர்ச்சியின் சாயல் அவர்கள் வாழ்ந்த தமிழகத்தின் நிலையான வாழ்க்கையின் பல கோணங்களிலும் பிரதிபலித்து நின்றதை அந்தக் கால கட்டத்தின் கட்டுமானம். மருத்துவம், கைவினைக் கலைகள், இலக்கியம் ஆகியவற்றில் காண முடிகிறது. அவர்களது மாளிகைகள் மேனிலை மாடங் களுடன் கூடிய உன்னதமாக உயர்ந்து காணப்படவில்லை. வானது நானும் படியாக அவர்களது கொடைத்திறன் தான் உயர்ந்து விளங்கியது. ஆனால் அவர்கள் வலசையாக வாழ்ந்த மனைகளில் தூய்மையும் எளிமையும் இணைந்து துவங்கின. “சோனக மனையிற்றுாய ... ...” என்பது கம்பன் வாக்கு.[1] என்றாலும், எல்லாம் வல்ல இறைவனை வழிபடுவதற்கான தொழுகைப் பள்ளிகளையும் இறைநேசர்களது அடக்க விடங்களையும் அவர்கள் சிறப்பாக அமைத்து மகிழத்தவறவில்லை. புதிய சமயத்தில் அவர்களுக்கு உள்ள அளவு மீறிய ஆர்வத்தையும் அவைகள் பிரதிபலித்தன.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இந்த அமைப்புகள், அதுவரை கட்டுமானக் கலையில் புகுத்தப்படாத புதிய உத்திகளையும், நிலைகளையும் சுட்டிக்காட்டின. நாளடைவில், அவை


  1. கம்பராமாயணம் - சுந்தர காண்டம் - ஊர் தேடு படலம். பாடல் எண். 112 (207)