பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

தர்க்காவை பின்பற்றுபவர்கள், ஒன்று கூடி அமர்ந்து திவ்விய நாம பாராயணம் (திக்ரு) செய்வதற்குப் பயன்படும் பொது மண்டபமாக இதனை அமைத்தார்.

தமிழக கட்டுமானக் கலையில் முழுமையான இஸ்லாமியப் பகுப்பினைப் பறைசாற்றும் பாணியில் விளங்குகின்ற இந்த வில் விதமான மண்டபம், நாற்பத்து இரண்டு அடி உயரமும் நூற்று இருப்பத்தாறு அடி உட்புறச் சுற்றளவும் கொண்டதாக கவிக்கப்பட்ட தேங்காய் மூடி போன்ற அமைப்பில் காணப்படுகிறது. உட்புறத்தில் எவ்வித விட்டங்களோ, சட்டங்களோ பயன்படுத்தாமல் "கும்பாஸ்", அமைப்பாக உள்ள இதனை "மஹ்ழறா" என அழைத்து வருகின்றனர். கூடும் இடம் என்ற பொருளில் உள்ள அரபுச் சொல்லான மஹ்ழறா.[1] தமிழில் வழங்கப்படுகிற பல அரபுச் சொற்களைப் போன்று இந்த கட்டுமானமும் அரபுச் சொல்லில் மாற்றம் இல்லாமல், அப்படியே இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள் தொழுகைப் பள்ளிவாசல் மட்டும் மேலே கண்ட பகுப்புகளில் வரையறுக்க முடியாததாகும். காரணம் இந்தப் பள்ளிவாசலை நிர்மாணித்தவர், மைசூர் அரசரது ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்து வந்த அந்தப் பாளையத்தின் ஆளுநகராக விளங்கிய செய்யது சாகிபின் மனைவியும் திப்பு சுல்தானின் அத்தையுமான அம்ருன்னிஸா பேகத்தின் நினைவாக அந்த தர்காவும் தொழுகைப் பள்ளியும் நிர்மானிக்கப்பட்டது. அவைகளின் பராமரிப்பிற்காக 360 ஏக்கர் கொண்ட நிலத்தையும் மேட்டுப்பட்டி கிராமத்தையும் மன்னர் திப்புசுல்தான் அளித்தார்.[2] இந்தப் பள்ளியும் இஸ்லாமிய கட்டுமானத்திற்கு ஏற்றதொரு எடுத்துக் காட்டாக எளிய அழகிய மிடுக்கான தோற்றத்துடன் விளங்குகிறது.

இந்தக்கால கட்டத்தைச் சேர்ந்த இன்னொரு பழமையான அமைப்பு சென்னைப் பெருநகரில் சேப்பாக்கம் கடற்ரையோரம் உள்ள நவாப் வாலாஜா முகம்மது அலியின் மாளிகை ஆகும். ஆற்காட்டிலிருந்து தமது இருப்பிடத்தை


  1. Ibld
  2. Board’s Misc. Register. 1811.