பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

175

நமது ஆய்வுக்குரிய தமிழக இஸ்லாமியரைப் பற்றிய கல்வெட்டுகளும் செப்பேடுகளும் எனக் கொள்ளுதல் பொருத்தமாகும்.

முதல் கல்வெட்டு

அண்ணல் நபிகள் (ஸல்) அவர்களது இறைமறையை, அன்னார்கள் காலத்திலேயே தாங்கி வந்த தவச் செல்வர்களான ஸஹாபி தமீம் உல் அன்சாரியினுடையதும் ஸஹாபி உக்காஸா வினதுமான அடக்க இடங்கள் முறையே கோவளத்திலும் முகம்மது பந்தரிலும் அமைந்துள்ள போதிலும் திருச்சிராப்பள்ளியில் முகம்மது அப்துல்லா-பின்-ஹாஜி முகம்மது அப்துல்லா நிர்மாணித்த தொழுகைப் பள்ளியில் வரையப்பெற்றுள்ள ஹிஜிரி 114 (கி.பி. 734)ம் வருட அரபிக் கல்வெட்டு தான்தமிழகத்தில் நமக்கு கிடைத்துள்ள தொன்மையான இஸ்லாமியக் கல்வெட்டாக கொள்ள வேண்டும். தமிழகத்தில் எட்டாம் நூற்றாண்டில் இஸ்லாமியர் தங்கிவாழத் துவங்கினர் என்பதை ஆதாரப்பூர்வமாகக் காட்டுகிறது இந்த சாசனம். இஸ்லாமியர்களது புதிய குடியிருப்புகள் திருச்சிராப்பள்ளியில் மட்டும் அல்லாமல் பாண்டியனது தலைநகரான மதுரையிலும், அந்த நாட்டின் கீழைப் கடற்கரையெங்கும் அஞ்சுவண்ணங்களாக அமைந்து இருந்தன. அதனை இராமநாதபுரம் மாவட்டம் தீர்த்தாண்ட தானக் கல்வெட்டு சான்று பகர்கின்றது. அந்தக் கல்வெட்டில் "இவ்வூரில் இருக்கிற அஞ்சு வண்ணமும், மணிக்கிராமத்தோரும் ஆரியர் சாமாந்த பண்டக சாலையும், பட்டாரியரும், தோயா வத்திரச் செட்டிகளும், தென்னிலங்கை வலஞ்சியரும், கைக்கோளரும் தூக வரும், வாணியரும், நீண்ட கரையாரும், கோயில் திருமுன்பிலே நிறைவறக்கூடி இருந்து” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

சோனகர்களது அஞ்சுவண்ணம் தமிழகத்தில் பல பகுதிகளில் அமைந்து இருந்ததை பல இலக்கியச் சான்றுகள் தெரிவித்தாலும் இந்தக் கல்வெட்டின் வாசகம் தான் வரலாற்றுக்கு ஆதாரமாக உள்ளது. சங்க இலக்கியங்கள் சுட்டுகின்ற யவனச்சேரிகள் போன்று. சோனகரது அஞ்சுவண்ணமொன்று மதுரைப் பெருநகரில்,ஒன்பது பத்தாவது நூற்றாண்டில் இருந்தது.சோனகர் பதினாயிரம் பொன்கொடுத்து, கூன்பாண்டியனிடமிருந்து கைக்கொண்ட காணி உரிமை பற்றிய வழ்க்கு ஒன்று


  1. A. R. 598/1926 தீர்த்தாண்டதானம்