பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

179

“.... ... .... மகாமதி சுரத்தானுக்கு யாண்டு பங்குனி எ/ந்தியதி நாள் பொன்னமராபதி நாட்டு பனையூர் குள மங்கலத்து ஊரக இசைந்த ஊரவரோம் குளமங்கலத்தில் தரகு காரியமாக இரண்டு ஊரும் படை பொருது ஆளும்பட்டு ஊரும் அழிந்து வேண்டின நிக்கே போய் மீண்டும் ஊரிலே குடி புகுதுகையில் எங்களில் குடி இராதபடியாலே நகரத்தாரும் கம்மாளருக் கூடி எங்களைச் சேர இருக்கையில் ... ... ...[1]

இவைகளிலிருந்து நான்கு உண்மைகள் பெறப்படுகின்றன.

அ) முதன்முறையாக இஸ்லாமியரின் ஹிஜிரி ஆண்டு கல்வெட்டில் கையாளப்பட்டுள்ளது.

ஆ) தமிழகத்தின் ஏனைய கல்வெட்டுக்களில் காணப்படுவது போல் இவைகளில் மன்னரது விருதாவஸிகள் பயன்படுத்தப்படவில்லை.

இ) சம்மந்தப்பட்ட இஸ்லாமியப் பெயர்கள் தமிழின் ஒலி வடிவத்திற்கு ஏற்ப தமிழுருப்பெற்று பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஈ) கல்வெட்டின் நடை கொடுந் தமிழாகவோ, கொச்சைத் தமிழாகவோ இல்லாமல் நல்ல பழகு தமிழாக அமைக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இஸ்லாமியக் கல்வெட்டிலும் மாற்றம் காணப்படுகின்றன. கி.பி. 1749ல் வரையப் பெற்றுள்ள ஆற்காட்டு நவாப்பினது கல்வெட்டு ஒன்றில்,

"... ... .... மகா மண்டலேசுவர மேதின மீசுர, அனேக சதுரங்காதிபதி, கெடிமண்ணியம் சுல்த்தானன், நாவலப் பெருந்தீவு நவமணி வேந்தன், பூர்வ, தட்சிண, பச்சிம, உத்திர, சது சமுத்திராதிபதி தில்லி ஆலங்கீர்ஷா மம்மதுஷா பிரிதிவி ராஜ்ஜியம் பண்ணி அருளா நின்ற சாலிவாகன சகாப்தம் 1645க்கு மேல் செல்லா நின்ற சோப கிருது பூரீசோமவாரத்தில் பூர்வ பக்ஷத்து


  1. பனையூர் (புதுக்கோட்டை) கல்வெட்டு