பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

ஸப்தமியும், அனுகார நாம யோகம் தை லாகரணமும் மகா நட்சத்திரமும் பெத்த நாளில் ஜெயங்கொண்ட தொண்டை மண்டலத்தில், தெண்ட கண்டு நாட்டில், ஊத்துக்காட்டுக் கோட்டத்தில் கருநாடக சுபா திவான்பாட்சா துல்லார்கான்- பகதூர் ராச்சியம் பண்ணுகையில் .... ... ....” என்ற மணிப்பிரவாள நடை அன்னியரான ஆற்காடு நவாப் ஆட்சியில், பயன்படுத்தப் பட்டுள்ளதால் அன்றைய நிலையில் செந்தமிழ் வழக்கு சோபையற்று விளங்கியது தெரியவருகிறது.

கல்வெட்டுகளைப் போன்று, காலத்தையும், கடந்து சென்றவர்களின் சாதனையையும் கட்டியம் கூறுபவை பட்டயங்கள் என்ற செப்பேடுகள். ராஜேந்திர சோழனது ஆனைமங்கலச் செப்பேடுதான் இஸ்லாமியர்களைப் பற்றிய பழமையான செப்பேடாக உள்ளது. இந்தச் செப்பேட்டில், சத்திரிய சிகாமணி வளநாட்டு பட்டணம் கூற்றத்து சன்னமங்கலத்து மத்யஸ்தன் துருக்கனகுமது" கையெழுத்திட்டுள்ளார். பத்தாவது நூற்றாண்டில் சோழர்களது ஆட்சியில் இஸ்லாமியர்கள் அஞ்சு வண்ணத்தைச் சேர்ந்தவர்களாக மட்டுமல்லாமல் தமிழ்ச் சமுதாயத்தில் தக்க சிறப்புடன் வாழ்ந்தனர் என்பதை சூசகமாக சொல்லும் செய்தி தான் இது. தொடர்ந்து பாண்டியப் பேரரசிலும், தமிழக இஸ்லாமியர்களுக்கு தனி சலுகையும் சிறப்பும் இருந்தன. ஆனால் அவைகளை விளக்கக்கூடிய செப்பேடுகள் எதுவும் கிடைக்கவில்லை. என்றாலும் மதுரையில் உள்ள காஜிமார் தெருவில் உள்ள தொழுகைப் பள்ளியை நிர் மாணிப்பதற்கு உதவியதுடன் அதனைத் பராமரிக்கவும் மதுரையை அடுத்த விரகனூர் கிராமத்தை முற்றுாட்டாக வழங்கி உத்திர விட்ட சந்தரபாண்டியனது செப்பேடு இன்றும் அந்தப் பள்ளியின் நிருவாகியிடம் இருப்பதாகத் தெரிகிறது. நூற்றாண்டுகள் பல முடிந்த பொழுதும், ஏகத்துவ நெறியைப் போதித்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உருவாக்கி வந்த தமிழக இஸ்லாமியர் பால் ஆட்சியாளரது அன்பும் அனுதாபமும் தொடர்ந்தன என்பதை தஞ்சை மராட்டிய மன்னர்கள், இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களது செப்பேடுகள் பல தெரிவிக்கின்றன, அனுமந்தக்குடி, இராமேஸ்வரம், ஏறுபதி, இராமநாதபுரம், கீழக்கரை ஆகிய ஊர்களில் அடக்கம் பெற்றுள்ள இஸ்லாமிய தவச் செல்வர்களிடம் பெருமதிப்புக் கொண்டு அந்தப் புனித