பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

193

என்பது உறுதி. முதல் முறையாகத் தமிழில் மாலை என்ற சிற்றிலக்கியம், பதினென் கீழ்க்கணக்கு நூலான “திணைமாலை ஐம்பது”க்குப் பிறகு ஆறாவது நூற்றாண்டில் காரைக்கால் அம்மையாரது “திருவிரட்டை மன்னி மாலையும்” எட்டாவது நூற்றாண்டில் என்ற புலவரது “மூத்த நாயனார் இரட்டை மணிமாலை” “சிவபெருமாள் திருவிரட்டை மணி மாலையும்என்பது உறுதி. முதல் முறையாகத் தமிழில் மாலை என்ற சிற்றிலக்கியம், பதினென் கீழ்க்கணக்கு நூலான “திணைமாலை ஐம்பது”க்குப் பிறகு ஆறாவது நூற்றாண்டில் காரைக்கால் அம்மையாரது “திருவிரட்டை மன்னி மாலையும்” எட்டாவது நூற்றாண்டில் என்ற புலவரது “மூத்த நாயனார் இரட்டை மணிமாலை” “சிவபெருமாள் திருவிரட்டை மணி மாலையும்” பதினோராவது நூற்றாண்டில் நம்பி ஆண்டார் நம்பியின் “திரு உலா மாலையும்” வெளிவந்துள்ளன. இரண்டாவது குலோத்துங்கன்னைப் பற்றி பன்னிரண்டாவது நூற்றாண்டில் பெரும்புலவர் கூத்தர்பிரானால் “பிள்ளைத்தமிழ் மாலையொன்று இயற்றப்பட்டதாகத் தெரிகிறது. (இந்த நூல் கிடைக்கவில்லை) அடுத்து, “மாலைகள்” இலக்கியங்கள் பதினைந்தாவது நாற்றாண்டில் தான் மிகுதியாகப் படைக்கப்பட்டுள்ளன. திருப் பனந்தான் திருமடத்தைச் சேர்ந்த அம்பலவாண தேசிகர் “அதிசய மாலை”யையும், “நமச்சிவாய மாலை”யையும் யாத்துள்ளனர். அடுத்து, வேதாந்த தேசிகரது, “நவரத்தின மாலை”, “திருச் சின்னமாலை”, என்பன அவை. மணவாள மாமுனிவரது “உபதேச ரத்தினமாலை“ குகை நமச்சிவாயரது “பரமரகசிய மாலை” ஆகியவை பதினைந்தாம் நூற்றாண்டில் குமரகுரு பரரது “இரட்டை மணிமாலை”, “சகல கலா வல்லிமாலை”, அழகிய சிற்றம்பலக் கவிராயரது “தனசிங்கமாலை” சிவப் பிரகாச சுவாமிகளது “நால்வர் நான் மணிமாலை”, “கைத்தல மாலை” “சோணசலமாலை” முதலியன பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இன்னும் பிற்காலத்தில் படைக்கப்பட்ட மாலைகள் பட்டியலை இங்கு குறிப்பிடுவது இயலாத காரியமாகும். காரணம், இஸ்லாமியப் புலவர்கள் மட்டும் இயற்றியுள்ள மாலைகளின் எண்ணிக்கையே இருநூறுக்கு மேற்பட்டவை ஆகும். இதனை இணைப்பு பட்டியலில் காண்க.

பதினாறாவது நூற்றாண்டில் இறுதியில் வாழ்ந்த இசுலாமியப் பெரும்கனான வண்ணப் பரிமள புலவர் அதிசய புராணம் என்ற “ஆயிரம் மசாலா” வைப்படைத்து அளித்தார். அவரை அடுத்து ஆலிப்புலவரது “மி.ராஜ் மாலை”, கனக கவிராயரது கனகாபிஷே, மாலை, உமறுப்புலவரது “சீறாப்புராணம்”, பனீ அகமது மரைக்காயரது “சின்னச்சீறா”, போன்றவை தோன்றின. இவைகளுக்கு எல்லாம் முன்னோடி