பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

கையாண்டு இருக்கின்றனர். சில சமயங்களில் சிறு மாறுதல்களுடனும், அவைகளைப் புகுத்தி இருப்பதை பல இலக்கியங்களில் காணக்கிடக்கின்றன.

அசர், பஜர், லுஹற் :- பாரசீக சொற்கள்
‘,பொருளில் அசர் லுகர் பஜறுளவும் பரிபூரணமாய் -
– ஞானமணிமாலை

அத்தஹிய்யாத் - பாரசீக சொல்
"அத்தகி யாத்தி ஆர்ந்திரு பொருள்கான்
– மி.றாசுமாலை பாடல் 593

அமான் - பாரசீக சொல்தமிழில் அம்சாரியை பெற்று "அமானம்" ஆகியுள்ளது.
"கன்திரு. மகனாக கவிதை உள்ளிடத்து அமானம்
- முகையதீன் புராணம் - பாடல் 10:23

ஹாலிம் - அரபி சொல் தமிழில் "ஆசிம்" என திரிபு பெற்றுள்ளது.
"நிலமிகை ஆசிம் குலம்பெயர் ஒங்கு..."
– சீறாப்புராணம் - பாடல் 687

இஜ்ஜத் - அரபி சொல்
"அரத்தொடும் இஜ்ஜத்தாம் எனப்பகர்ந்தனர்
- முகியத்தின் புராணம் - பாடல் 44:32
 
வலிமா - அரபி சொல் தமிழில் ஒலிமா என திரிபு பெற்றுள்ளது.
"வந்தவர் விருப்பிறண்ணும் வகை ஒலிமாவும் ஈந்தார்
– நாகூர் புராணம் - பாடல் 8:122

ஹதிஸ் - அரபி சொல் தமிழில் "கதிது" என திரிபு பெற்றுள்ளது.
"சொல்லரும் புகழ் தூதர் கதீதுகள்
சின்னச் சீறா - பாடல்: 34:155
 
குறைஷ் – அரபி சொல்
"குறைசியப் குலத் தொரு மதனை
- சீறாப்புராணம் - பாடல் 4:63

லக்காத் - பார்சி சொல்
"பரிகடனென்றும் சக்காத்துப் பொருளலால்
- குதுபுநாயம் - பாடல்:243