பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18


கிழக்கு கடற்கரையிலும் இத்தகைய குடியிருப்புகள் சில எழுந்தன. முகவை மாவட்டத்து கடற்கரைப் பகுதியை நத், வந்து குடியேறிய அரபு நாட்டாரின் நத்தம், பல இங்கு எழுந்தன. இன்றைய தேவிபட்டினத்தின் தென்பகுதி “அரப தான் காடு”[1] (“அரபு நத்தக்காடு”) என்ற பெயரில் இன்னு வழங்கப்பெறுகிறது. பெரியபட்டினம் கிராமத்தின் வடக்கு பகுதியில் இருந்த இத்தகையதொரு நத்தம், “நத்தக்காடு” என வழங்கப்படுகிறது. கீழக்கரைக்கு அண்மையில் உள்ள கிராமம் ஒன்று இன்றும் “நத்தம்” என்றே பெயர் பெற்றுள்ளது.[2]

இந்தக் குடியிருப்புகள், பிற்காலக் கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் “அஞ்சு வண்ணம்” என்றும் “அஞ்சு வன்னம்” எனவும் குறிப்பிட்டுள்ளன. கேரளத்தில் குடியிருந்த முஸ்லீம்களது குடியிருப்பும் "அஞ்சு வண்ணம்” என்ற குறிக்கபட்டுள்ளது. இந்தக்குடியிருப்புகளில் இருந்த முஸ்லிம்கள் அஞ்சுவண்ணத்தினர் என அழைக்கப்பட்டனர். நாளடைவி அவர்களது சபை அஞ்சுவண்ணம் சுன்னத் ஜமாத் என்றும், அவர்களது பள்ளிகள் அஞ்சுவண்ணப் பள்ளியென்றும். வழங்கப்பட்டன். நெல்லை மாவட்ட ஏர்வாடி நகரின் ஒரு பகுதி “புலியூர் அஞ்சவண்ணம்” என்று கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. குமரி மாவட்டத்தில் “அஞ்சுவண்ணம்” என்ற சிற்றுார் உள்ளது. அஞ்சுமன் என்ற பாரசீகச் சொல்லின் தமிழ் விகாரம் தான்


  1. எஸ்.எம். கமால் – உலகமகா தேவிபட்டினம் (ஆய்வுரை)
  2. இன்றைய தமிழகத்தில் நத்தம் என்ற பெயர் விகுதிகளின் மூலம் சில ஊர்கள் இருந்து வருவது ஈண்டு ஒப்புநோக்கதக்கது.
    புத்த(ர்) நத்தம் — திருச்சி மாவட்டம்.
    ஈச நத்தம் — திருச்சி மாவட்டம்
    பிள்ளை(மா)யார் நத்த்ம் — நெல்லை மாவட்டம்
    வேடர் நத்தம் — நெல்லை மாவட்டம்
    அரசர் நத்தம் — நெல்லை மாவட்டம்
    முதுவார் நத்தம் — முகவை மாவட்டம்
    அபிராம நத்தம் — முகவை மாவட்டம்
    Pate S.R — Gazetteer of Tirunelvely