பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

இந்த தமிழ்ப் பெயர் எனக் கருதப்படுகிறது.[1] மன்றம், சபை, சாத்து என்ற பொருளியல் பாரசீக மொழியில் வழங்கப்பெறுவது அஞ்சுமன் ஆகும். ஒன்பது, பத்தாவது நூற்றாண்டின் மாறவர்மனது தீர்த்தாண்ட கல்வெட்டிலும்[2] பாஸ்கார ரவிவர்மன் என்ற கேரள மன்னனது கோட்டயம் கல்வெட்டிலும்[3] அஞ்சுவண்ணம் குறிக்கப்படுகின்றது. பழந்தமிழ்ப் பாடல் ஒன்றில், நாகபட்டினத்துக்கருகில் உள்ள ஒரு அஞ்சு வண்ணம் வர்ணிக்கபடுகிறது.

“குடக்கினிற் றுரங்கமும் வடக்கினிற் கலிங்கமும்
     குணக்கினிற் பசும்பொனும் குளித்த தெற்கில்
அடிப்பரப் பிடைக்கலந் தனேக வண்ணமாக வந்
     தஞ்சு வண்ணமுந் தழைத்தறத்தின் வண்ணமானவூர்..”

என்பதே அந்தப் பாடலின் அடிகளாகும். மேலும் பதினைந்தாவது நூற்றாண்டு சிற்றிலக்கியமான பல்சந்தமாலையில் “அயன்மிகு தானையர் அஞ்சு வண்ணத்தவர்” என்றும் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்ட மிகுராஜமாலையில் “அண்டர் தருவெனக் கொடுக்கு மஞ்சு வண்ண முசுலிமவர்கள்” என அஞ்சுவண்ணத்தினர் பேசப்படுகின்றனர்.[4] இதனைப் போன்றே நெல்லை மாவட்டத்தில் சோனகன் விளையும், முகவை மாவட்டத்தில் சோனகன் பேட்டையும், தமிழ் மண்ணில் தழைத்து எழுந்த இஸ்லாமிய அரபியரது குடியிருப்புகளையே சுட்டுவதாகும். இவை தமிழ் மண்ணில் தழைத்திருந்த பொழுதும் இந்தக்குடியிருப்பு பகுதிகளின் முழு நிர்வாகத்தையும் இஸ்லாமியரது சுயேட்சையான ஆட்சி அமைப்பு நிர்வகித்து வந்தது. இந்த அமைப்புகளின் இயக்கத்தில் இந்த நாட்டு மன்னர்கள் தலையிடவில்லை. இசுலாமியரது வாழ்க்கை, செயல்பாடு, குற்ற இயல் சம்பந்தமான அனைத்து நிலைகளிலும் அந்த தன்னாட்சி அமைப்பு நடுநாயகமான தலைவனது தீர்ப்பு


  1. சதாசிவ பண்டாரத்தார் – தி. வை. - கல்வெட்டு கூறும் உண்மைகள் (1961) பக் 21
  2. A. R. 598/1926 தீர்த்தாண்ட தானம் (இராமநாதபுரம்)
  3. களவியற்காரிகை (வையாபுரிப்பிள்ளை பதிப்பு) (1945) ஆலிப்புலவர். மிகுராஜ் மாலை (பதிப்பு 1962) பக்கம் 86
  4. Trivangore – Coachin Archallogical Series vol. II р. 21, 25, 34, 35, 67.