பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

கடைப் பிடிக்கப்பட்டது. காயல்பட்டினத்தில் இயங்கிய இசுலாமிய தன்னாட்சி அமைப்புபற்றி நூலாசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.[1] “அஞ்சு வண்ணமும் தழைத்து அறத்தின் வண்ணமான ஊர்” என மேலே தனிப்பாடல் குறிப்பிடுவது இந்த ஆட்சி அமைப்பையும் அங்கு நிலவிய “ஷரியத்” முறையையும் என்பதும் வெளிப்படை.

இத்தகைய அராபிய குடியேற்றம் ஒன்று. மதுரையம்பதியில் இருந்ததை மதுரை கோரிப்பாளையம் தர்காவில் உள்ள கல்வெட்டு ஒன்று உறுதி கூறுகிறது.[2] இதனைப் பற்றி மதுரைச் சீமை வரலாற்றின் ஆசிரியர் அலக்ஸாந்தர் நெல்சன் குறிப்பிட்டு இருப்பதின் சுருக்கமாவது, ... “... ... ... மதுரை மன்னனாகிய கூன்பாண்டியன் இன்றைய கோரிப்பாளையம் எனப்படும் சொரிகுடி, சொக்கிகுளம், பீபிகுளம், கண்ணாரேம்பல், சிறுதூர் திருப்பாலை ஆகிய ஆறு பகுதிகளை, அராபிய வணிகர்களுக்கு பதினாயிரம் பொன் பெற்றுக் கொண்டு கையளித்தான், தமிழ் நாட்டுக் கடற்கரையில் சிறப்பான வணிகத்தில் ஈடுபட்டிருந்த அவர்கள், மதுரையில் நிலையாகத் தங்குவதற்காக கோரிப்பாளையம் என்ற இந்தப் பகுதிகளை பாண்டிய மன்னனிடம் இருந்து பெற்று இருக்கவேண்டும். இந்த நிகழ்ச்சி பத்தாவது நூற்றாண்டிற்கு முன்னதாக நடைபெற்று இருத்தல் வேண்டும். ஆனால், இந்த நிலங்களைப் பற்றிய உரிமைப் பிரச்சினையொன்று இஸ்லாமியர்களுக்கும் ஏனையோருக்கும் பின்னர் எழுந்த பொழுது, மதுரை மன்னனாக இருந்த வீரப்ப நாயக்கர் (கி.பி. 1572-1595) நியாய பூர்வமான விசாரணையொன்றை நடத்தினார். கோரிப்பாளையம் தர்காவிற்கு நேரில் சென்று ஆவணங்களை பார்வையிட்டு அந்த நிலங்களின் மீதான இஸ்லாமியர்களது உரிமை உண்மையானதென்று கட்டளையிட்டுள்ளார். அதனைக் கல்வெட்டிலும் சாலிவாகன சகாப்தம் 1495 பவ வருடம் தை மாதம் பதினோராம் நாள்(கி.பி. 1573)


  1. Mooreland — W.H. — From Akbar to Aurangages (1923) London p. 222
  2. (a) A.R. 77/1905 கோரிபாளையம் (மதுரை)