பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

என்பது, “சோனகர் யவனர்” என்பது திவாகரத்தாலும், பத்துப்பாட்டில் “யவனர்” என்னும் சொல் வருமிடமெல்லாம் நச்சினார்க்கினியர், “சோனகர்” என உரை கூறிப் போந்ததாலும் விளங்கத்தக்கது.

“பிற்காலத்தில் இச்சோனகர் எல்லாம் தம் பழைய தேசத்தவர் போலவே, இஸ்லாத்தை தழுவலாயினர். இது பற்றிய “யவனத் துருக்கர்” என்றார் அடியார்க்கு நல்லார்,” யவனர் என்ற இலக்கியப் பிரயோகம் இஸ்லாமிய அரேபியர்களைத் தான் சுட்டுவதாக மகாவித்வான் அவர்கள் மேலே கண்டவாறு விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

ஆசிரியர் பெயர் தெரிந்து கொள்ள இயலாத பல்சந்த மாலை பாடல் “... .... ... ஏழ் பெருந்தரங்கத்து யவனர், அல்லாவென வந்து ... .... ....” என, அல்லாவைத் தொழுகின்ற அரபியர், யவனர் என்பதை ஐயமற அறுதியிட்டுக் குறிப்பிடுகிறது.[1] இந்த யவனர் என்ற சொல்லின் பிரயோகம் பதின்மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட இலக்கியங்களில் மட்டும் காணப்படுவதாலும், இந்த நூலும், அந்த நூற்றாண்டை அல்லது அதற்கு அடுத்த நூற்றாண்டுகளைச் சார்ந்ததாக இருத்தல் வேண்டும். யவனர்கள் தங்கள் வீட்டுச் சாளரங்களுக்கு இட்ட மூடுதிரை போன்ற பட்டுத்திரை திருக்கோயில் கருவறைகளில பயன்படுத்தப்பட்டது. அதனைக் கல்வெட்டுக்கள் “யவனிகை” என குறிப்பிடுகின்றன.[2] இதேசொல், பின்னர் “நமனிகை” என்றுகூட வழக்கு பெற்றது. யமன் என்ற சொல் "நமன்" என்றால் போல, இவ்விதம், இஸ்லாமிய அரபிகள் அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் தங்களது இஸ்லாமிய வணிகச் சாத்துக்களைப் பெருக்கிக் கொண்டதுடன் ஆங்காங்கே நிலையான குடியேற்றங்களை அமைத்து தமிழ்ச்சமுதாயத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டனர், என்பதும் தெளிவாகிறது. தங்களது வளமையான வாணிபத்தில்


  1. களவியற் காரிகை (பதிப்பு - வையாபுரிப்பிள்ளை) 1945. பக்கம் 139.
  2. HULTZCH. E. Dr — South Indian Inscription - Vol. II - Part. 1 (1891) p. 7. Ins. No. 6.