பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தனித்து நின்றதுடன் தமிழ் மண்ணுக்குரிய தண்ணளியிலும் மிகுந்து நின்றதனை, அதே பல்சந்தமாலைபின் இன்னொரு பாட்டில்,

"வானது நானக் கொடையா லுலகை வளர்த்தருளும் சோனகர் வாழும் செழும் பொழில் சூழ்ந்து ...."†

[1] என்று ஈதலறத்திற்கு இலக்கணமாக சுட்டப்படும் மாரியே நானுமாறு இஸ்லாமியர்களது புகழ் வாழ்க்கை அமைந்து இருந்தது சித்தரிக்கப்பட்டுள்ளது.

இங்ஙனம், அராபிய இஸ்லாமியருக்கு அடுத்த தாயகமாக தமிழ் மண் விளங்கியது. எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இராக் நாட்டு பஸ்ராலின் அதிபதியாக இருந்த ஹிஜாஜ் இபுனு யூசுப் (ஹிஜ்ரி 41 முதல் 95 வரை) பின் கொடுமைக்கு அஞ்சிய இஸ்லாமியர் பலர், கடல் வழியாக வந்து பாண்டிய நாட்டின் பழம்பெரும் துறையான கொற்கையில் கரை இறங்கினர். அங்கு ஆட்சி செய்த பாண்டியமன்னன், அவர்களை ஆதுரத்துடன் வரவேற்றுப் புகலிடம் வழங்கினான். இந்த அகதிகள் கொங்கணக் கரையில் குடியேறியதாக பாரசீக நூலாசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.[2]

இது நிகழ்ந்தது கி.பி. 714ல் அன்று முதல் இஸ்லாமியர் கொற்கையில் நிலைத்து வாழ்ந்து வந்தனர். தங்களது தாயகமான கெய்ரோவாகவே (பின்னர் காயலான) கொற்கையை “காயிறூன்” எனவும் “காயிறுன்” எனவும் வழங்கினர். அங்குள்ள செப்பு பட்டயமொன்றில் பொறித்துள்ளவாறு அப்பொழுது 226 சோனகர், காயலை வந்தடைந்ததாகத் தெரிகிறது. அவர்களின் விபரம் :–

1. ஹாஷிம் வம்சத்தார்  23 பேர்
நாச்சியார் பெண்டுகள்  9 பேர்
அடிமைகள்  4 பேர்

  1. களவியற்காரிகை(பேராசிரியர் வையாபுரிபிள்ளை பகுப்பு) பக்கம் 132
  2. Burhan - Ibl - Hassan : Tuhfat - al - Mujahideen (Persion) р. 5