பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

சொல் வடமொழி, தெலுங்கு, இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் “துருஷ்கா” என பயன்படுத்தப்பட்டு உள்ளது. “சீமத்த சனீகார துலுஸ்க தானுஸ்க” என்பது தாராபுரம் கல்வெட்டுத் தொடரில் உள்ள விருதாவளியாகும்.[1] விஜய நகர மன்னர்களுக்கு “துலுக்க மோகந் தவிழ்ந்தான்” “துலுக்க தள விபாடன்” என்பனவும், அவர்கள் விருதாவளி (சிறப்புப் பெயர்கள்) எனத் தெரிய வருகிறது.[2] வீரபாண்டிய தேவரது நிலக் கொடையொன்றில் எல்லை குறிப்பிடும்பொழுது கோவை மாவட்ட பாரியூர் கல்வெட்டு, “கிழக்கு புரட்டலுக்கு மேற்கு, துலுக்கன்பட்டி நேற் மேற்கு” என வரையறுத்துள்ளது.[3] கொங்குநாட்டில், துலுக்கர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் நிலைத்துவிட்டதை இந்தக் கல்வெட்டு உறுதிசெய்கிறது. மற்றும் தாராபுரம் கல்வெட்டு “துலுக்கர் பள்ளியாகி தானம் தெரியாம லாகிவிட்ட[4]....” என்ற 14வது நூற்றாண்டின் கல்வெட்டுத் தொடரும் “முன்னாள் ராஜராஜன் ஶ்ரீசுந்தரபாண்டியத் தேவர் துலுக்கருடன் வந்த நாளையில் ... ...” என்ற திருக்களர் கல்வெட்டும்[5] “துலுக்கர் பலசேமங்கள் தப்பித்து ....” என்ற திருவொற்றியூர் கல்வெட்டுத் தொடரும், துலுக்கர் பற்றிய வரலாற்றுச் செய்திகளை குறிப்பிட்டு, துலுக்கர் தமிழ் மண்ணில் தழைத்துவிட்ட பாங்கினை கோடிட்டு காட்டுகின்றன. இன்றைக்கும் தமிழ்நாட்டில், சில பகுதிகளில் உள்ள சிற்றுார்கள் “துலுக்கர்” குடியிருப்பைக் குறிக்கும் வகையில் அவைகளின் ஊர்ப்பெயர்கள் அமைந்துள்ளன. அவை,

1. துலுக்கபட்டி — வில்லிபுத்துர் வட்டம்
2. துலுக்கபட்டி — சாத்துரர் வட்டம்

  1. தென்னிந்திய கோவில் சாசனங்கள் எண் 309AD-2949-1 தாராபுரம்
  2. சுப்பிரமணியம் பூ - மெய்கீர்த்திகள் (1885) பக் 294-95 கணோச 68/D — 2871
  3. தென்னிந்திய கோயில் சிலாசாசனங்கள் (l) தொகுதி சாசனம் பக்கம் 309/D2949
  4. A. R. 642/1902 திருக்களர்
  5. தென்னிந்திய கோயில் சாசனங்கள் தொகுதி - - எண். 523. பக்கம். 82-17