பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

துருக்கம்  செல்லுதற்கரிய இடம், காடு, மலையரசன்
துருக்கம்   கஸ்துாரி, குங்குமம்
துருக்க வேம்பு   மலை வேம்பு
துருக்கற்பொடி   செம்பிளைக் கற்பொடி
துருக்கமாலை   குங்கும மலர்மாலை
துருக்கத்தலை   கரு நிறமுள்ள கடல் மீன் வகை
துலுக்கி   சிங்காரி
துலுக்கடுவன்   ஒருவகை நெல்
துலுக்கப்பூ   துலுக்கச் செவ்வந்தி
துலுக்க மல்லிகை   பிள்ளையார் பூ என வழங்கப்படும் மலர், செடி
துலுக்க பசளை   கீரை வகை
துலுக்க பயறு   பயறு வகை
துலுக்க கற்றாழை   கரிய பவளம் (நாட்டு மருந்து)

மற்றும், “துருக்கர்நாடு” என்ற நிலக்கூறு இருந்ததை பதின்மூன்றாவது நூற்றாண்டு இலக்கிய கர்த்தாவான பரஞ்சோதி முனிவர், தமது திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிட்டுள்ளதும்[1] இங்குபொருத்தமுடையதாக உள்ளது. மற்றும், தமிழில், ஷர்பத், சிப்பாய், மணங்கு, தர்பார், தைக்கா வக்கீல், அமீர், உலமா, காஜி, ஜாகிர், ஜமீன்தார் போன்ற துருக்கி மொழிச் சொற்களும், தமிழ்ச் சொற்களாக வழக்கிற்கு வந்துள்ளன.


  1. பரஞ்சோதிமுனிவர் – திருவிளையாடற்புராணம்–மாணிக்கம்விற்ற படலம். பாடல் : எண் 65.