பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

கோவில் கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன, “சோனகன் சாவூர்” என்பவரும் “சோனக சிடுக்கு” என்ற அணியும் குறிப்பிடப்பட்டுள்ளது.[1] மற்றும், அந்த மன்னனது பதினைந்தாவது ஆட்சியாண்டு கல்வெட்டு "சோனக வரி" பற்றிய குறிப்பைத் தருகிறது.[2] இந்த மாமன்னனது மைந்தனான இராஜேந்திர சோழனது கோலார் கல்வெட்டில், “திருமந்திர ஓலை நாயகன் கங்கைகொண்ட சோழபுரத்து ராஜ்ய வித்தியாதரப் பெருந்தெரு சோனகன் சாவூர்” என்பவரை குறிப்பிடுகிறது. மதுரைப் பாண்டியரது வாரிசுப் போரில் பராக்கிரம பாண்டியனுக்கு உதவ வந்த சிங்களப் படையினை, இராமநாதபுரம் மாவட்டம் செம்பொன்மாரி அருகில், கி.பி. 1170ல், பரிசுப் பொருட்களுடன் அங்கிருந்த சோனகர் வரவேற்று மகிழ்ந்ததாக இலங்கை வரலாற்று நூலான மகாவம்சத்தை மேற்கோள்காட்டி பேராசிரியர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் வரைந்துள்ளார்.[3] இந்தச் செம்பொன்மாரிக்கு அண்மையில் அரபிகளது அஞ்சுவண்ணம் அமைந்திருந்ததை ஒருவாறு ஊகிக்க முடிகிறது.

பாண்டியர் கல்வெட்டுக்களில் இருந்தும், தமிழகத்தில் சோனகர் பற்றிய விவரங்கள் தெரிய வருகின்றன. பாண்டியரது மெய்க்கீர்த்திகளில், பல நாட்டவர்களில் ஒருவராக, சோனகர் சொல்லப்பட்டு இருக்கின்றனர்.

"குச்சரரும் ஆரியரும் கோசலரும் கொங்கணரும்
வச்சிரரும் காசியரும் மாகதரும்
அருமணரும் சோனகரும் அவந்தியரு முதலாய ... ...”

என்பது சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1258 - 71) மெய்கீர்த்தியின் ஒரு பகுதியாகும்.[4] பாண்டியன் திருபுவனச்


  1. நாகசாமி Dr. இரா–தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் (1962) பக்கங்கள் 232, 237, 255
  2. AR-172/1903 (திருக்காளத்தி)
  3. Krishnasami Iyangar Dr. S. - South India and her an Invaders (1921) p. 6. சதாசிவ பண்டாரத்தார் - தொ. மு. பாண்டியர் வரலாறு (1950) பக். 216
  4. AR 455 / 1903 (மாறமங்கலம்)