பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வரை தொடர்ந்த இந்த வணிகத்தைப் பற்றி பல வரலாற்று ஆசிரியர்கள் விவரமாக வரைந்துள்ளனர். இந்த நூற்றாண்டு இறுதியில் பாரசீக நாட்டில் இருந்து குதிரை வியாபாரிகளாக வந்த சுல்தான் குலி என்பவர் கி.பி. 1518ல் ஐதராபாத் சமஸ்தானத்தில் (ஆந்திராவில்) குதுப் ஷாஉறி பரம்பரை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.[1] அத்துடன் இந்தக் குதிரை வணிகத்தால் தமிழ்நாட்டு அரசு வருவாய் இனங்களில் மூன்று புதிய இனங்கள் ஏற்பட்டன. அவை, குதிரை வரி, குதிரைக் காணிக்கை, குதிரைப் பந்தி என்பவையாகும்.[2] பாண்டியர்களது ஆட்சியின் முடிவு வரை அமுலில் இருந்ததை பல கல்வெட்டுக்களில் இருந்தும் செப்பேடுகளில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகிறது. மற்றும் நாயக்கர்களது, ஆட்சியின் பொழுது "குதிரைக் கொடை" என்ற சிறப்பும் வழக்கில் இருந்தது, தெரியவருகிறது.[3] இவ்விதம் ஒரு கால கட்டத்தில் தமிழக அரசியலில் பிரதான அங்கமான அரபு நாட்டுக் குதிரைகள் விளங்கியதுடன் அதனைக் கொணர்ந்து பழக்கி, பேணி, தமிழ் மன்னர்களுக்குப் பயன்படச் செய்து அரபிகள், ராவுத்தர்களென பெயர் பெற்றதும் தமிழர்களுடன் மண உறவு கொண்டு தமிழ்க் குடிகளாகவே மாறிவிட்டது, நமது வரலாற்றில் சிறப்பான அம்சமாகும்.

தொன்மைக் காலங்களில், தமிழக இஸ்லாமிய அரபிகளுக்கு இந்த சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது. நாளடைவில் குதிரை வணிகம் மட்டுமல்லாமல், அரசு சேவையில் குதிரை வீரராகவும், குதிரை அணியின் தளபதியாக விளங்கியவர்களைக் குறிக்கவும் இந்தச் சொல் பயன்பட்டுள்ளது. திருப்பெருந்துறையில், குதிரை வணிகராக வந்து, தனது துயர்களைந்த இறைவனை, "துய்ய பேருலகிற்கெல்லாம் துலங்கிய ராவுத்த ராயன்" என வாயார, வாழ்த்துகிறார் வாதவூர் அடிகள். இராமப்பையன் அம்மானை குதிரையணி தளபதியை “ராவுத்த கர்த்தன்” என குறிப்பிடுகிறது,[4] “ராவுத்தராயன்” “ராவுத்த


  1. Syed Yousuff-Guide to Hydrabad anp Golconda Fort-p.14.
  2. Tirumalai - Tirupathi Inscription - T. T. 164, G. T. 11, 40>
  3. A. S. S. I. VOL. IV (1886) p. 107
  4. இராமய்யன் அம்மானை (1958)