பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

கர்த்தன்” என்ற வழக்குகளும் இஸ்லாமியத் தமிழர்களைச் சுட்டுவதற்காக எழுந்த சொற்களாகும். இந்தச் சொற்களுக்கான வேர். எந்த மொழியில் ஒட்டியுள்ளது என்பது ஆய்வுக்குரிய தொன்றாகும். ராபித்தூ என்ற அரபிச் சொல். தமிழில் விகாரமடைந்த “ராவுத்த” என்ற வழக்கு பெற்று இருப்பதாக சிலர் கருதுகின்றனர். எதிரியை எதிர்க்க சித்தமாக இருப்பவன் என்பதே ராபித்துள். தமிழில் மட்டுமல்லாமல், “ராவுத்தர்” தெலுங்கு மொழியிலும் “ராவுத்” எனச் சற்று குறுகலான வடிவில் வழக்கில் இருந்து வருகிறது. குதிரை வீரன் என்ற பொருளில், “இம்மாடி ராகுத்தராயன” “ராகுத்தராயன் சிங்கப்ப நாயக்கன்” போன்ற தெலுங்கு மன்னர்களது பெயர்கள் திருப்பதி – திருமலை கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.[1] ஈரோடு கல்வெட்டு ஒன்று, தெலுங்கு ஆளுநரான “பர்வத ராகுத்தன்” என்பவரைக் குறிப்பிடுகிறது.[2] ராஜராஜ சோழனது விருதுகளில், “ராகுத்தமிண்டன்” என்ற சொல்லும் வழங்கி வந்துள்ளது,வடஆற்காடு மாவட்டம், காவேரிப்பாக்கம் கல்வெட்டுக்களில் கி. பி. 1509ல் சிங்கய ராவுத்தன் தங்கல் என்ற கிராமமும் கி. பி. 1530ல் காமாட்சி ராவுத்தன் தங்கல் என்ற கிராமம் குறிப்பிடப்பட்டுள்ளன.[3] சேலம் மாவட்டம் ஆறகழுர் கல்வெட்டு ஒன்றில் ஹொய்சாள ராமதேவரது பதின்மூன்றாவது ஆட்சியாண்டில், நாட்ட மங்கலம் என்ற கிராமம் ராகுத்த ராயன் இறையிலி தேவதானமாக" வழங்கப்பட்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.[4] மதுரை சொக்கேசர் ஆலயத்திருப்பணி செய்தவர்களில் திம்மு ராவுத்தர் என்பவர் குறிப்பிடப்படுகிறார்.[5]அவரது காலம் கி. பி. 1564 என்றும் தெரிய வருகிறது. அவரைத் “தண்டமிழ்க் கச்சி வளம்பதி வாழுஞ் சதுரன்” என்றும் “திண்டருங் கீர்த்தி மிக்க சுவப் பையன் திம்மு ராவுத்தனே” என்றும் புகழ்ந்து உரைப்பவை திருப்பணி மாலையில் உள்ள தொடர்கள்.


  1. A.R. 442/1906 – கோபி செட்டிபாளையம்
  2. A.R. 169/1910 – விஜயமங்கலம்
  3. A.R. 367/1912 – காவேரிப்பாக்கம்
  4. A.R. 414/1913 – ஆறகழுர்
  5. மதுரை திருப்பணி மாலை (பாடல் எண்)